वर्षा- महत्व

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.   (௰௯ - 19) 

इस विस्तृत संसार में, दान पुण्य तप कर्म ।
यदि पानी बरसे नहीं, टिकें न दोनों कर्म ॥  (१९)


तमिल (தமிழ்)
மழை பெய்து உதவாவிட்டால், இந்தப் பரந்த உலகத்திலே பிறருக்காகச் செய்யப்படும் தானமும், தனக்காக மேற்கொள்ளும் தவமும் இரண்டுமே நிலையாமற் போய்விடும் (௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும். (௰௯)
— மு. வரதராசன்


மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது. (௰௯)
— சாலமன் பாப்பையா


இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும் (௰௯)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀸𑀷𑀫𑁆 𑀢𑀯𑀫𑁆𑀇𑀭𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀢𑀗𑁆𑀓𑀸 𑀯𑀺𑀬𑀷𑁆𑀉𑀮𑀓𑀫𑁆
𑀯𑀸𑀷𑀫𑁆 𑀯𑀵𑀗𑁆𑀓𑀸 𑀢𑁂𑁆𑀷𑀺𑀷𑁆 (𑁛𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Thaanam Thavamirantum Thangaa Viyanulakam
Vaanam Vazhangaa Thenin
— (Transliteration)


tāṉam tavamiraṇṭum taṅkā viyaṉulakam
vāṉam vaḻaṅkā teṉiṉ.
— (Transliteration)


Both charity and penance would cease in this vast world, Should heavens fail to deliver.

तेलुगु (తెలుగు)
తపముఁ జెడును దాన ధర్మంబు లుడుగును
నీరు జారకున్నఁ నింగి నుండి (౧౯)


मलयालम (മലയാളം)
വാനം പിന്മാറിയെന്നാകിൽ ജനം ചെയ്തുവരുന്നതാം തപദാനാദികൾക്കെല്ലാം നൂനം വിഘ്നം ഭവിച്ചീടും (൰൯)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಮಳೆಯಾಗದೇ ಹೋದರೆ ಈ ಲೋಕದಲ್ಲಿ ದಾನ, ತಪಸ್ಸು ಎರಡೂ ನೆಲೆಸಿ ಇರುವುದಿಲ್ಲ. (೧೯)

संस्कृत (संस्कृतम्)
परार्थमिह यद्दानमात्मार्थञ्चेह यत् तप: ।
अभयं न भवेल्लोके यदि देवो न वर्षति ॥ (१९)


सिंहाली (සිංහල)
වැසි පල නොදේ නම්- මේ මහ පොළෝ තලයට නො නැවත පලා යෙයි- දානයත් සීලයත් මේ දෙක (𑇪𑇩)

चीनी (汉语)
雨水不降, 則慨施與吝嗇並消失於世間. (十九)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Baik Kebajikan mahu pun Pertapaan tidak akan kekal di-dalam dunia luas ini sa-kira-nya langit menghalang ayer hujan-nya.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
비가 내리지 않는다면, 세상에 관용도 속죄도 없을 것이다. (十九)

रूसी (Русский)
Не будет дождя — и огромный мир не вспомнит о подаянии и добродетели

अरबी (العَرَبِيَّة)
لن يفعل أحد خيرا او يقدم كفارة إن امسكت السماء بادرا رها بالماء (١٩)


फ्रेंच (Français)
La charité et l’austérité disparaitront de cette vaste terre, si le ciel n’y envoie pas de pluie.

जर्मन (Deutsch)
Lässt die Wolke den regen nicht fallen, so gibt es in der weiten Welt keine Freigebigkeit und keine Buße mehr.

स्वीडिश (Svenska)
Om himlen icke skänker regn kan varken allmosor eller askes bestå i hela vida världen.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Et largitio et castimonia corporis in spatioso orbe manere non poterunt, nisi coelum largiatur. (XIX)

पोलिश (Polski)
I nie będzie na ziemi litości ni cnoty, Jeśli nieba w czas mgła nie powlecze.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22