Farming

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.   (௲௩௰௯ - 1039) 

Sellaan Kizhavan Iruppin Nilampulandhu
Illaalin Ooti Vitum
— (Transliteration)


cellāṉ kiḻavaṉ iruppiṉ nilampulantu
illāḷiṉ ūṭi viṭum.
— (Transliteration)


If the landlord neglects his field visits, The angry land will sulk like a neglected wife.

Tamil (தமிழ்)
நிலத்துக்கு உரியவன் நாள்தோறும் சென்று பார்த்து, வேண்டியவை செய்யாது சோம்பினால், அந்த நிலமும், அவன் மனைவியைப் போல, அவனோடு பிணங்கி விடும் (௲௩௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும். (௲௩௰௯)
— மு. வரதராசன்


நிலத்திற்கு உரியவன் நாளும் நிலத்திற்குச் சென்று செய்ய வேண்டியதைச் செய்யாது சோம்பி இருந்தால், கடமை ஆற்றாத கணவனை முதலில் மனத்தால் வெறுத்துப் பின் அவனோடு ஊடி விடும் மனைவியைப் போல நிலமும் முதலில் வாடிப் பிறகு பலன் தராமல் போய்விடும். (௲௩௰௯)
— சாலமன் பாப்பையா


உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும் (௲௩௰௯)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀷𑁆 𑀓𑀺𑀵𑀯𑀷𑁆 𑀇𑀭𑀼𑀧𑁆𑀧𑀺𑀷𑁆 𑀦𑀺𑀮𑀫𑁆𑀧𑀼𑀮𑀦𑁆𑀢𑀼
𑀇𑀮𑁆𑀮𑀸𑀴𑀺𑀷𑁆 𑀊𑀝𑀺 𑀯𑀺𑀝𑀼𑀫𑁆 (𑁥𑁝𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
चल कर यदि देखे नहीं, मालिक दे कर ध्यान ।
गृहिणी जैसी रूठ कर, भूमि करेगी मान ॥ (१०३९)


Telugu (తెలుగు)
కయ్యమీద దృష్టిఁ గాపు జూపకయున్న
భర్తప్రేమలేని భార్యవిధము. (౧౦౩౯)


Malayalam (മലയാളം)
കൃഷിയേറ്റും നിലം നിത്യം സന്ദർശിച്ചു പുലർത്തണം അല്ലായ്കിൽ പത്നിയെപ്പോലെ സ്നേഹത്തോടെ വെറുത്തിടും (൲൩൰൯)

Kannada (ಕನ್ನಡ)
ನೆಲದೊಡೆಯನಾದವನು ತನ್ನ ನೆಲವನ್ನು ಸರಿಯಾಗಿ ನೋಡಿಕೊಳ್ಳದಿದ್ದಲ್ಲಿ, ಕುಪಿತಳಾದ ಕೆಂಡತಿಯಂತೆ, ಅವನಲ್ಲಿ ಆ ನೆಲವು ಅಸಹಕಾರವನ್ನು ತೋರುತ್ತದೆ. (೧೦೩೯)

Sanskrit (संस्कृतम्)
केदारमनिशं गत्वा स्वामी यदि न पश्यति ।
भूमिरप्रीतिपत्नीव विरक्ता तं परित्यजेत् ॥ (१०३९)


Sinhala (සිංහල)
අයිතිකරු ගොවියා - ගොවි පලට නො ගියේ නම් කිපුණු බිරියක් මෙන් - නො සතූටෙන් අස්වනු අඩුව දේ (𑇴𑇬𑇩)

Chinese (汉语)
農夫怠於耕作, 其田地之顏色, 將醜怒過於婦人之見棄於其夫也. (一千三十九)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Jikalau petani tidak mengunjongi sawah-nya tetapi berleka di-rumah sahaja, tanah-nya akan tersinggong kapada-nya, saperti juga isteri- nya.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
토지소유자가밭을방문하지못하면, 외면한아내처럼시무룩해지고아무것도수확하지못하리라. (千三十九)

Russian (Русский)
Если крестьянин не выходит в поле пахать, то почва потемнеет и разгневается на него, словно жена, на которую муж не обращает внимания

Arabic (العَرَبِيَّة)
رجل بر وصالح لا يزور حـقـله بل يجلس فى بيته سيخق عليه حـقله ويغضل كما تنحق وتغضبعلى رجل أمراءته (١٠٣٩)


French (Français)
Si le cultivateur ne visite pas tous les tours son champ et n'y fait pas par paresse le nécessaire, le champ le boudera et finira par se fâcher contre lui, tout comme son épouse.

German (Deutsch)
Geht der Besitzer nicht regelmäßig auf sein Land, schmollt und wirft sich das Land auf wie eine Frau.

Swedish (Svenska)
Om husbonden icke ständigt besöker sin åker kommer denna liksom hans hustru att vrenskas och vägra honom sin ynnest.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Si herus ipse non visitans procul absit, ager succensens sese sub- trahet mulieri similis. (MXXXIX)

Polish (Polski)
Na takiego zaś, który się leni wyjść w pole, Ziemia się jak kobieta obraża.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நிலமும் மனைவியும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

குடும்ப வாழ்க்கையில், கணவனுக்கும் மனைவிக்கும் சில கடமைகள்- உரிமைகள் உள்ளன. அவரவர் கடமையை, அவரவர் உரிமையோடு செய்ய வேண்டும். தலையீடு உண்டானால் சச்சரவு உண்டாகும்.

கணவன் மீது மனைவிக்கு கோபம் ஏற்படுமானால், அவன் அவரிடம் இன்பத்தை அனுபவிக்க இயலாது.

அதுபோல, நிலம் வைத்திருப்பவன், தினந்தோறும் போய், நிலத்தை கவனித்து, செய்ய வேண்டியதை முறையாக செய்யவில்லையானால், நிலத்துக்கு வெறுப்பு உண்டாகிவிடும். அதாவது விளைச்சல் இல்லாமல் போய்விடக்கூடும்.

மனைவியின் கோபம், இன்பத்தைத் தடைசெய்யும்.

நிலத்தின் வெறுப்பு விளைச்சலைப் பாதிக்கும்.


செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22