தேரைப் பார்த்து மகிழ்பவர்கள், அந்தத் தேருக்கு ஆதாரமானது அச்சாணித்தான் என்பதை அறிய மாட்டார்கள். அதுபோல, மக்கள் சமுதாயத்தை வாழவைப்பவர்கள் உழவர்களே! அவர்களுடைய உழைப்பு இல்லாவிட்டால் உலகமக்களுக்கு உணவு தாணியங்கள் கிடைக்கா. வாழ வழி இல்லை.
மற்ற எல்லா தொழிலையும் செய்பவர்களுக்கும் கூட உழவுத்தொழிலே உணவு அளித்துக் காப்பாற்றுகிறது.
விஞ்ஞானியோ, அறிஞரோ, அரசியல்வாதியோ உலகுக்கு உணவு கிடைக்க வழி செய்யவில்லை.
உழுது பயிரிட்டு விளைச்சலை உண்டாக்கக்கூடிய உழவர்கள்தான் உலக மக்களின் வாழ்க்கையை நடத்திச் செல்கின்றனர்.
உழவர்களே உலகுக்கு அச்சாணி போன்றவர்.