நிலம் செழிப்பாக இருந்தால், நாற்று செழிப்பாக வளரும். நல்ல பயனைத் தரும். பாத்தியிலே உற்பத்தியாகும் சிறிய முளையானது, அந்த நிலத்தின் தன்மையை காட்டும்.
அதுபோல, உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் நல்ல பண்பான மொழிகளை கூறுவார். அவற்றால் நன்மைகள் உண்டாகும். பெருமையாகவும் இருக்கும். மட்டமான குடும்பத்தில் பிறந்தவன் தகாத சொற்களை - இழிவான பேச்சுக்கலை பேசுவான். அதனால் மனம் நோகும்.
எனவே, அவரவருடைய சொற்களே அவரவரது குடும்பத்தின் தன்மையை காட்டிவிடும்.
(இக்காலத்தில், உயர்ந்த குடும்பத்தில் இழிவானவனும், தாழ்ந்த குடும்பத்தில் உயர்வானவனும் தோன்றுகின்றான். படிப்பு, பழக்கவழக்கம், சூழ்நிலை காரணமாக மாறுபடலாம்).