வானத்தில் திகழும் நிலவின் குளிர்ந்த ஒளியின் இன்பத்தை எல்லோரும் கண்டு களிக்கிறார்கள்.
அதே சமயம், இல்ல நிலவில் உள்ள களங்கத்தையும் பார்க்கிறார்கள். அவர்கள் கண்களுக்கு அது தெரிகிறது.
அதுபோல, நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு உயர்ந்த பண்புகள் இருப்பதை சான்றோர்கள் கண்டார்கள். அதனால், அதற்கு சிறப்பு தந்து போற்றினார்கள்.
அத்தகைய உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் இடம் ஒரு சிறு குற்றம் காணப்படுமானால், அது பெரிதாக தெரியும்.
அவரிடம் உதவியோ, நன்மையும் பெறுகிறவர்கள்கூட அவரிடம் காணப்படும் குற்றத்தையும் உணர்வார்கள்.
இக்காலத்திலும் இது ஓரளவு காணப்படுகிறது.