உடுத்தியுள்ள வேட்டியானது உடலில் இருந்து அவிழ்ந்து கீழே நழுவியபோது உடனே கை விரைந்து சென்று அதை சரிசெய்துவிடுகிறது.
அதுபோல, ஒருவனுக்கு துன்பம் நேரிட்டபோது, உடனே சென்று அந்தத் துன்பத்தை நீக்கி விடுவதற்கு, உதவுவது சிறந்த நட்பாகும்.
எந்த நேரத்திலும், எந்த விதமாகவும் எத்தனையோ வகையில் துன்பம் வரக்கூடும். நண்பன், உறவினன், அக்கம்பக்கத்தில் வசிப்பவன், கூடப் படித்தவன், கூட வேலை செய்பவன் இப்படியாக, எவனாயினும் துன்பம் அடைந்தால் அதன் உண்மை தெரிந்து இயன்றவரை உதவவேண்டும்.
(இடுக்கண் என்னும் துன்பம் வேறு; ஆபத்து, விபத்து வேறு. ஆபத்தோ, விபத்தோ ஏற்படும்போது, அந்த நேரத்தில் தெரிந்தவனா? தெரியாதவனா? என்று பார்க்காமல், மனிதாபிமானம் கொண்டு முடிந்த உதவி புரிய வேண்டும்.)