வளர்பிறைச் சந்திரன், நாள்தோறும் சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டே வந்து, முழு நிலவாகி ஒளியுடன் அழகாக காட்சி அளிக்கிறது.
தேய்பிறைச் சந்திரன் தினமும், குறைந்து கொண்டே போய் இருள் சூழ்ந்து விடுகிறது.
அதுபோல, நல்ல இயல்புடைய, அறிவுடையோரின் நட்பானது குணத்தாலும், அறிவாலும், பண்பாலும் வளர்ந்து மேன்மையான உயர்வை அளிக்கும்.
அறிவற்ற தாழ்ந்தவருடைய கூட்டுறவானது இழிவான குணங்களை அதிகரித்து அறிவை மழுங்கச் செய்து மதிப்பை குறைத்து, தாழ்வு அடையச்செய்யும். அறிவுடையோர், அறிவுள்ளவரிடமே நட்பு கொள்வர்; அறிவில்லாதவர் அறிவற்றவருடனேயே சேருவார்.