ஒரு நல்ல மரத்தின் இயல்பு நல்ல நிழலை கொடுத்து, காய் கனிகளை வழங்கி, மக்களை தன்பால் ஈர்த்து மகிழ்வுற செய்வதே சிறப்பு.
அப்படி இல்லை என்றால், அந்த மரமானது அதனுடைய தன்மை இழந்து விடுகிறது. மேலும், மண்ணிலே தோன்றி, மண்ணிலே மடிந்துவிடுமானால், அந்த மரத்தால் என்ன பயன்?
அதுபோல, கண்ணின் மூலம் அன்பை வெளிப்படுத்தி, மகிழ வேண்டும். பின்னர் உலகத்தாருக்கு ஆனந்தத்தை அளிக்க வேண்டும். இவ்வாறு அன்பை வெளிப்படுத்தி கண்களால் பலருடைய ஆதரவை பெற வேண்டும்.
அதுவே கண் பெற்ற பயன்!
கண்ணைப் பெற்றிருந்தும், கண்ணோட்டம் இல்லையானால், யாருக்கு என்ன பயன்?