நெருப்புப் பற்றினால், பற்றின பொருள்களை எரித்து சாம்பலாக்கும். என்றாலும், நெருப்பு வைத்தவனை அது ஒன்றும் செய்யாது. ஆனால், தீய செயலானது, பிறருக்குத் தீமை உண்டாகும். அதோடு, அதை செய்தவனுக்கு தீமை ஏற்படுத்தும். ஆகையால், தீய செயல், நெருப்பை விட கொடியது. அதனால் தீய செயலுக்கே பயப்பட வேண்டும்.
எனவே, தீய செயலை நினைக்காமலும், செய்யாமலும் இருப்பது நன்மை தரும்.