The Greatness of Ascetics

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.   (௨௰௫ - 25) 

Aindhaviththaan Aatral Akalvisumpu Laarkomaan
Indhirane Saalung Kari
— (Transliteration)


aintavittāṉ āṟṟal akalvicumpu ḷārkōmāṉ
intiraṉē cāluṅ kari.
— (Transliteration)


Even the celestial king Indra will vouch the strength Of one who rules his senses five.

Tamil (தமிழ்)
ஐம்பொறி வழியாக எழுகின்ற ஆசைகளை அவித்தவனுடைய வலிமைக்கு அகன்ற வானுலகோர் கோமானாகிய இந்திரனே போதிய சான்று (௨௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான் (௨௰௫)
— மு. வரதராசன்


அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான் (௨௰௫)
— சாலமன் பாப்பையா


புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான் (௨௰௫)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀐𑀦𑁆𑀢𑀯𑀺𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀆𑀶𑁆𑀶𑀮𑁆 𑀅𑀓𑀮𑁆𑀯𑀺𑀘𑀼𑀫𑁆𑀧𑀼 𑀴𑀸𑀭𑁆𑀓𑁄𑀫𑀸𑀷𑁆
𑀇𑀦𑁆𑀢𑀺𑀭𑀷𑁂 𑀘𑀸𑀮𑀼𑀗𑁆 𑀓𑀭𑀺 (𑁜𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
जो है इन्द्रिय-निग्रही, उसकी शक्ति अथाह ।
स्वर्गाधीश्वर इन्द्र ही, इसका रहा गवाह ॥ (२५)


Telugu (తెలుగు)
నిగ్రహిఁచుకొన్న నిష్ఠ గరిష్ఠుని
కమర ప్రభువె సాక్షి యంబరమున (౨౫)


Malayalam (മലയാളം)
ഇന്ദ്രിയനിഗ്രഹം ചെയ്തു കൈവരിക്കുന്ന മാതൃക വാനലോകത്തിലെല്ലാർക്കും നേതാവായിടുമിന്ദ്രനാം (൨൰൫)

Kannada (ಕನ್ನಡ)
ಐದು ಇಂದ್ರಿಯಗಳನ್ನು ನಿಗ್ರಹಿಸಿದವನ ತಪೋಬಲಕ್ಕೆ ವಿಶಾಲವಾದ ಆಕಾಶದಲ್ಲಿ ನೆಲೆಸಿರುವ ದೇವತೆಗಳ ದೊರೆಯಾದ ಇಂದ್ರನೇ ಸಾಕ್ಷಿ. (೨೫)

Sanskrit (संस्कृतम्)
आशापञ्चकमुक्तस्य गीयते शक्तिरुत्तमा ।
गौतमादात्तशापोऽत्र देवराजो निदर्शनम् ॥ (२५)


Sinhala (සිංහල)
පසිඳුරන් දමනය - කළ උමන්ගෙ ගූණ බල නිදසුන් පිණිස වේ - දෙව් රදුන් වූ ඉන්දිරන් තෙම (𑇫𑇥)

Chinese (汉语)
大神印德拉爲一切克制五欲獲有成就者之見證. (二十五)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Ingin-kah kamu mengetahui kuasa wali yang telah menguasai pan- chaindera-nya? Perhatikan-lah Indra, Raja segala Dewa2: dia sa- orang sa-bagai chontoh sudah memadai.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
천상의 왕, 인드라 (Indra)는 스스로 오감을 정복한 사람의 능력에 대한 증인이다. (二十五)

Russian (Русский)
Даже Бог Индра испытал на себе могущество того, кто покорил пять чувств *

Arabic (العَرَبِيَّة)
رب السماوات (إندرا) نفسه شاهد على أن قوة الرجال الذين يقهرون الحواس الخمسة تتفوق على قوى الجميع (٢٥)


French (Français)
La puissance de celui qui détruit en lui les cinq (passions produites par les sens) q été attestée par Indra lui-même, Roi des vastes régions célestes.

German (Deutsch)
Indra, König derer im weiten Himmel – ein Beispiel ist er für die Macht eines, der seine fünf Sinne beherrscht.

Swedish (Svenska)
Självaste konung Indra som härskar över gudarna i den vida rymden kan vittna om dens makt som har avsvurit sig de fem sinnenas begärelser.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
De potestate illius, qui quinque (affectus sensuum) exstinxit, Indra, rex eorum, qui immenusum aetherem inhabitant, locuples teatis est (quippe qui potestatem illam in se ipso expertus sit). (XXV)

Polish (Polski)
Indra*, pan na niebiosach i król wszystkich dewów* Dał nam przykład, jak władać zmysłami.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஆசையால் ஏற்பட்ட அவமானம் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

ஐந்து புலன்களை, அடக்கி ஆள்பவர் பெருமைக்கும், புகழுக்கும் உரியவர். ஆற்றல் மிக்கவர், புலன்களை கட்டுப்படுத்த இயலாதவர் நிலைமை என்ன ஆகும்? அதற்குச் சாட்சி வேண்டுமானால், தேவர்களின் அதிபதியான இந்திரன் ஒருவனே போதும்.

ஐந்து புலன்களை அடக்கி, மெய்யறிவு பெற்றவர் கௌதம முனிவர்; அவருடைய மனைவி அகல்யை. இந்திரன் காமவசமாகி முனிவரின் மனைவியை கள்ளத்தனமாக கூடிச் சுகித்தான்.

அதை அறிந்த முனிவர் இந்திரனை சபித்தார். சாபம் பெற்ற இந்திரன் அவமானம் அடைந்தான். ஐந்து புலன்களையும் அவன் கட்டுப்படுத்த முடியாததனால் உண்டான துன்பம்.

(வள்ளுவர் காலத்திலேயே, புராணக் கதைகள் இருந்திருக்கின்றன என்பது தெரியவருகிறது).

ஐந்து புலன்கள் என்பவை; மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன. ஐம்புலன், ஐம்பொறி என்றும் கூறுவார்கள்.


ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22