உலகத்துக்கு மழை இன்றியமையாதது. அதன் அருமையை எல்லோரும் அறிவார்கள்.
மழை தவறாமல் பெய்வதனால், உலகம் இயங்கி வருகின்றது. அதனால் மழை என்பது உலகம் அழியாமல், காக்கும் அமுதம் என்று உணர்கின்றோம்.
மக்கள் முதல் விலங்குகள், பறவைகள், புல், பூண்டு, செடி, கொடி வரைக்கும் வானத்திலிருந்து பொழிகின்ற மழையானது அமுதம் போன்ற உணவாக போற்றத்தக்கது.
(கிடைப்பதற்கு அரிய ஒரு பொருளை, அதுவும் உயிர் தரும் நீரை அமுதன் என்று சிறப்பித்துக் கூறுவது பொருந்தும்.)
(அமுதம், அமிர்தம், அமிழ்தம்- ஒரே அர்த்தமாகும்)