戒有財不用

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.   (௲௩ - 1003)
 

以聚歛爲事而不顧名譽者, 乃世之重擔也. (一千三)
程曦 (古臘箴言)

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.   (௲௭ - 1007)
 

人有資財而不施於需用之者, 其資財如不嫁之老女, 徒浪費其靑春耳. (一千七)
程曦 (古臘箴言)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: அட்டாணா  |  Tala: ஆதி
பல்லவி:
நன்றி யில்லாத செல்வம் நாய் பெற்ற தெங்கம் பழம்
நயன் காணுமோ ஒரு
பயன் காணுமோ அறிவீர்

அநுபல்லவி:
குன்றுபோல் செல்வப் பொருள் குவித்து வைத்திருந்தாலும்
கொண்டவர் நுகரா விடில்
கண்ட பயன் ஏது சொல்வீர்

சரணம்:
எச்சமென்றே தேனும் இருக்குமோ சொல்வதற்கு
ஈதல் இயல்பிலாதான் பெற்ற வாழ்வும் எதற்கு
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம் பழுத்த தென்னும் துச்சமாக யாரும் எண்ணும்

வாட்டத்தைப் போக்காதவர் வறியோர் பசியாற்றாதவர்
வடிவழகின் குமரி மணமின்றி மூத்தாற் போலாம்
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப்பொறை என்றே குறளும் சொல்லும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22