使臣

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.   (௬௱௮௰௧ - 681)
 

慈和之心性, 髙尚之出身, 令人敬慕之風度, 爲使臣者, 應具此數端. (六百八十一)
程曦 (古臘箴言)

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.   (௬௱௮௰௫ - 685)
 

賢頁之使臣, 出言溫馴而有耐性; 卽使駁辯, 亦不以鹵莽出之. (六百八十五)
程曦 (古臘箴言)

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.   (௬௱௮௰௭ - 687)
 

賢明之使臣能識其時勢, 明其處境, 知其任務, 而言有分寸. (六百八十七)
程曦 (古臘箴言)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: கேதாரம்  |  Tala: ரூபகம்
பல்லவி:
தூது சொல்லத் தகுந்தவர் இவர் காண்!
துணையாய் எந்த அரசும் விரும்பும்

அநுபல்லவி:
ஓதும் கல்வி யறிவும் அழகும்
உண்மை யன்பும் பண்பும் பழகும்

சரணம்:
ஊரை வருந்தாமல் போரை நிறுத்திடும்
உலக சமாதானம் தன்னில் பொருத்திடும்
பாறையாம் பகை நெஞ்சும் மகிழ உரைத்திடும்
பலவும் தொகுத்துச் சொல்லும் இனிமை
பயனை எடுத்துக் காட்டும் தனிமை

"இறுதி பயப்பினும் எஞ்சா திறை வற்கே
உறுதி பயப்பதாம் தூதெ" னும் திருக்குறள்
கருதியே காலத்தால் காணும் இடம் பொருள்
கண்ணஞ்சாமல் நின்று காக்கும்
எண்ணும் நன்மை யாவும் சேர்க்கும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22