農事

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.   (௲௩௰௧ - 1031)
 

人遊蕩四方, 終將還歸田畝而躬耕以給其食, 此農事之所以爲重也. (一千三十一)
程曦 (古臘箴言)

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.   (௲௩௰௩ - 1033)
 

惟鋤作於田地者, 可稱自爲其生; 他人皆仰賴之以生存也. (一千三十三)
程曦 (古臘箴言)

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.   (௲௩௰௪ - 1034)
 

王者能以威權統治臣庶, 有賴於農民田中之豐稔收穫. (一千三十四)
程曦 (古臘箴言)

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.   (௲௩௰௫ - 1035)
 

農耕之人, 從不乞食; 反之, 常施食於人而不拒. (一千三十五)
程曦 (古臘箴言)

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.   (௲௩௰௮ - 1038)
 

施肥優於犁鋤; 田地刈除雜草之後, 守護更重於灌漑. (一千三十八)
程曦 (古臘箴言)

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.   (௲௩௰௯ - 1039)
 

農夫怠於耕作, 其田地之顏色, 將醜怒過於婦人之見棄於其夫也. (一千三十九)
程曦 (古臘箴言)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: ஹேமாதி  |  Tala: ஆதி
பல்லவி:
சீரைத் தேடின் எரைத் தேடு
செய்யும் தொழிலுக் கெல்லாம்
இது முதலீடு

அநுபல்லவி:
யாரையும் வேண்டாது அறநெறி தாண்டாது
அரும் பசிக்கே உதவும்
அமுதை விளைவு செய்யும்

சரணம்:
விலகி இருந்தால் நிலம் வெறுக்கும் சிரிக்கும்
வேண்டி உழவு செய்தால் ஈண்டிவளம் சுரக்கும்
பலகுடை நீழலும் தம் குடைக்கீழ்க் காணலாம்
அலகுடை நீழலவர் எனும் விதம் சேரலாம்

பழந்தமிழ்ப் பண்பாடும் பலகலையும் நாடும்
பசுவினம் பால் பொழியும் பண்ணைகள் உறவாடும்
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை எனும் குறள் இதனால்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22