愼於用人

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.   (௫௱௧ - 501)
 

用人之先, 須試以四事:義氣, 金錢, 癖好, 與及是否貪生怕死. (五百一)
程曦 (古臘箴言)

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.   (௫௱௪ - 504)
 

檢討一人之善惡, 權其孰輕孰重, 然後可以定其爲善爲惡. (五百四)
程曦 (古臘箴言)

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.   (௫௱௬ - 506)
 

愼用無眷屬之人, 以其心無所寄而薄於情也. (五百六)
程曦 (古臘箴言)

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.   (௫௱௭ - 507)
 

莫因偏愛而用粗心之徒, 用之足以招無盡之煩惱也. (五百七)
程曦 (古臘箴言)

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.   (௫௱௯ - 509)
 

未經審愼考驗, 莫輕於用人, 一經用之, 卽應以事委之. (五百九)
程曦 (古臘箴言)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சிந்துபைரவி  |  Tala: கண்ட ஆதி
கண்ணிகள்:
தெரிந்து தெளித்தலே நன்று - நாட்டின்
தேவைக்கு யார்மிகத் தக்கவர் என்று
விரிந்துள்ள மக்களின் தொகுதி - நன்மை
வேண்டியே பொறுப்பேற்க வருவோரின் தகுதி

ஆட்டுக்குக் காவல் ஓநாயா - கிளி
அன்புக்குப் பாலூட்டப் பூனைதான் தாயா
கேட்டுக்கு வழி தேடலாமா - நம்
கிளை யென்றே மாற்றானைக் கொண்டாடலாமா

பணமே படைத்தோன் என்றாலும் - அன்றி
படித்தவன் அன்புள்ள நண்பன் நின்றாலும்
குணம் நாடிக் குற்றமும் நாடி - அவற்றுள்
மிகை நாடி மிக்க கொள்வோம் குறள் நாடி

பழிக்கஞ்சி நாணிடும் தன்மை - பொருள்
பாவையர் மயக்கிலும் வீழாத வன்மை
அழியினும் உயிருக் கஞ்சாமை - உள்ள
அறங்கூறும் வினையாளன் ஆட்சிக்கு மேன்மை

பொன்னை உரைப்பது கல்லே - மனிதன்
தன்னை உரைப்பதும் அவன் செயல் சொல்லே
முன்னை ஆராய்ந்தவ னிடமே - ஐயம்
மோதாமல் நம்பிக்கை கொள்வதும் நலமே




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22