短葷

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: ஆரபி  |  Tala: ரூபகம்
பல்லவி:
உயிரைக் கொன்று தின்னலாகுமா - நீ
உடலைக் காக்க

அநுபல்லவி:
பயிரைக் காக்கும் உழவன் போல
பசுவைக் காக்கும் ஆயன் போல
உயிரைக் காக்கப் பிறந்த நீங்கள்
உள்ளங் கொண்டே ஊனை விரும்பி

சரணம்:
தன்னூன் பெருக்கற்குத் தான் பிறிதூன் உண் பான்
தன்னிடம் நல்லருள் தங்குமோ; என்றும் தான்
தின்னும் பொருட்டுயிர்க் கொல்லா துலகெனின்
தேவை என்றே விலைக்காகவும் கொல்வரோ

சேரும் உணவில் புலால்தனைக் கொள்ளாதே
தேகத்தின் புண்ணது தீண்டவும் தீண்டாதே
கூறும் ஓராயிரம் வேள்வியினும் ஒன்றைக்
கொன்று தின்னாமையே நன்றென்னும் நம்குறள்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22