妻室

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?.   (௫௰௩ - 53)
 

妻若賢德, 家庭復有何求?妻若不賢德, 家庭復何有? (五十三)
程曦 (古臘箴言)

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.   (௫௰௫ - 55)
 

若婦人起身, 未崇禮神明而先崇禮其夫, 風雨可受其呼喚也. (五十五)
程曦 (古臘箴言)

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.   (௬௰ - 60)
 

幸福之最大者爲光榮之家庭, 後世蒙其餘蔭. (六十)
程曦 (古臘箴言)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: காம்போதி  |  Tala: ஆதி
பல்லவி:
பெண்ணின் பெருமையை
எண்ணி நாம் மதித்திடப்
பேசும் திருக்குறள் காண்!
பொய்யா மொழியார்
பேசும் திருக்குறள் காண்!

அநுபல்லவி:
கண்ணின் மணியாய்க் கனியின் சுவையாய்க்
கலந்துயிர் வாழ்க்கையில்
மலர்ந்து நலம் விளைக்கும்

சரணம்:
தன்னையும் காத்துத் தன் கணவனையும் காத்து
தகுதியுடைய புகழ் மிகுதியும் சேர்த்து
பொன்னைப் பொருளைவிட மென்மேலாய்ப்
போற்றும் தன் கற்பினை ஏற்றும் திண்மை மிகுந்த

நினைத்தபடி நடக்கும் ஆடவர் தம்மை
நேர்வழிப் படுத்தியே சீர்செய்யும் பெண்மை
"மனைத்தக்க மாண்புடையளாகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத்துணை" என்றே மணம் கமழும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22