知人而用

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.   (௫௱௰௬ - 516)
 

用適當之人作遒當之事於適當之時, 此須熟慮之. (五百十六)
程曦 (古臘箴言)

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.   (௫௱௰௭ - 517)
 

人主用人, 須先明其所長, 適於何等事務, 然後以全貴付之. (五百十七)
程曦 (古臘箴言)

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.   (௫௱௨௰ - 520)
 

人君應毎日省察萬事, 俾使百官不失所職, 國政不失正道. (五百二十)
程曦 (古臘箴言)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: தேசு  |  Tala: ரூபகம்
கண்ணிகள்:
தெரிந்து வினையாடல் - கற்றுத்
தேர்ந்த வனைக் கூடல்
புரிந்து சமுதாயம் - என்றும்
போற்றத் தகும் நேயம்.

தலைவனிடத்தில் அன்பும் - மிகத்
தன்னறிவும் தெளிவும்
அலைக்கும் அவா வின்மையும் - வினை
யாளன் பெறுங் குணமாம்.

கால நிலை நாடும் - தன்
கடமையில் கண்ணோடும்
சீலமுள்ளோன் உரிமை - பெறச்
செய்யின் மிகும் திறமை.

பண்பை மாற்றும் பதவி - பெரும்
பழிசெய்யவும் உதவி
என்பதையும் நினைக்க - மனம்
என்றும் கோணா திருக்க

நன்மை தீமை யறிந்தும் - அவை
நாடி நலம் புரிந்தும்
தன்மையா னாளப் படும் - சீர்
தங்கும் திருக்குறளே.




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22