軍備

ஒலித்தக்கால் என்னாம் உவரி எல§ப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.   (௭௱௬௰௩ - 763)
 

鼠辈成軍, 雖呼嘯如海洋之勢, 毒蛇一嘶, 卽潰滅矣. (七百六十三)
程曦 (古臘箴言)

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.   (௭௱௬௰௪ - 764)
 

惟勇而無畏, 堅不可摧, 能征慣戰之隊伍, 可稱爲軍. (七百六十四)
程曦 (古臘箴言)

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.   (௭௱௬௰௬ - 766)
 

精神勇猛, 聲威顯赫, 頭腦冷靜, 態度忠良, 軍隊之四維也. (七百六十六)
程曦 (古臘箴言)

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.   (௭௱௬௰௮ - 768)
 

軍隊稍乏進取沉着之精神者, 有優頁之裝備抵補之, 亦可有成. (七百六十八)
程曦 (古臘箴言)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: மோகனம்  |  Tala: ரூபகம்
பல்லவி:
படையின் மாட்சியே - இந்தப்
பார் முழுதும் பேர் விளங்கப்
போர் முனையில் வெற்றி முழங்கும்

அநுபல்லவி:
தடையே யின்றி எங்கும் செல்லும்
தன்னாற்றலால் பகையை வெல்லும்
தாங்கிடும் உறுப்பாக மேவிப்
பாங்குடன் வளர் செல்வமாகும்

சரணம்:
பெற்ற தன்னாட்சியால் வறுமைநோய் அற்றது
பேரணி வகுப்பிலும் பெருமையே பெற்றது
குற்றமில்லாத் தலை மக்கள் பால் கற்றது
கூற்றுடன்று மேல்வரினும்
கூடி எதிர்க்கும் ஆற்றலதுவே

"ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்" என்னும் குறளுரை
வலிவுள்ள வீரனால் மாண்புறும் போர்ப்படை
மானம் வீரம் நல்லொழுக்கம்
காணும் தேற்றம் நாளும் காக்கும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22