莫懼内

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.   (௯௱௨ - 902)
 

丈夫而爲婦人橇惑者, 卽有財富, 亦徒增笑柄, 不能遮其羞也. (九百二)
程曦 (古臘箴言)

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.   (௯௱௪ - 904)
 

畏怯於内人之前者, 縱有功業, 亦不能爲人所敬. (九百四)
程曦 (古臘箴言)

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.   (௯௱௬ - 906)
 

爲婦人之蠱惑所制者, 縱然貌若神明, 亦不能稱爲大丈夫. (九百六)
程曦 (古臘箴言)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: வசந்தா  |  Tala: ஆதி
பல்லவி:
இல்லாளை அஞ்சி ஏனோ வாழ்கின்றாய் நீ
இப்படியுமா உலகில் ஏழையாகித் தாழ நின்றாய்

அநுபல்லவி:
நல்லார்க்கு நல்ல செயல் செய்திடவும் அஞ்சுகின்றாய்
நாணிக் கோணி மனையாளை நாளும் நாளும் கெஞ்சு கின்றாய்

சரணம்:
பட்டம் பெற்றாலும் என்ன பதவியில் உயர்ந்தும் என்ன
பாரினில் தேவரைப் போல் பாங்குடன் வாழ்ந்தும் என்ன
நட்டார் குறை முடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங் கொழுகுபவர் பேரே கெடும் இதனால்

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை யுடைத்தெனும் குறள் சொல்லிதை
எண் சேர்ந்த நெஞ்சத் திடனுடையாரைச் சேர்ந்திடுக
பெண்சேர்ந்த பேதைமையை இன்றே நீ கைவிடுக




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22