戒卑鄙

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.   (௲௭௰௧ - 1071) 

卑鄙之辈, 徒具人形, 世間少見如是之賤者也.  (一千七十一)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
வடிவமைப்பால் கீழ்மக்களும் மக்களைப் போன்றிருப்பார்கள்; அவரைப் போல ஒப்புமையான ஒன்றை வேறிரண்டு சாதிக் கண் யாம் எங்கும் கண்டதில்லை (௲௭௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை. (௲௭௰௧)
— மு. வரதராசன்


கயவர் வெளித்தோற்றத்தில் மனிதரைப் போலவே இருப்பர்; விலங்கு பறவை போன்ற பிற இனங்களில் அவருக்கு ஒப்பானவரை நான் கண்டது இல்லை. (௲௭௰௧)
— சாலமன் பாப்பையா


குணத்தில் கயவராக இருப்பர் ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார் மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும் (௲௭௰௧)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀓𑁆𑀓𑀴𑁂 𑀧𑁄𑀮𑁆𑀯𑀭𑁆 𑀓𑀬𑀯𑀭𑁆 𑀅𑀯𑀭𑀷𑁆𑀷
𑀑𑁆𑀧𑁆𑀧𑀸𑀭𑀺 𑀬𑀸𑀗𑁆𑀓𑀡𑁆𑀝 𑀢𑀺𑀮𑁆 (𑁥𑁡𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Makkale Polvar Kayavar Avaranna
Oppaari Yaanganta Thil
— (Transliteration)


makkaḷē pōlvar kayavar avaraṉṉa
oppāri yāṅkaṇṭa til.
— (Transliteration)


The wicked look utterly like men! Such close mimics we have never seen!

印地语 (हिन्दी)
हैं मनुष्य के सदृश ही, नीच लोग भी दृश्य ।
हमने तो देखा नहीं, ऐसा जो सादृश्य ॥ (१०७१)


泰卢固语 (తెలుగు)
అందఱివలె నుందు రల్పులఁ జూడంగ
తెలుసుకొనంగ లేము గురుతు దెల్పి. (౧౦౭౧)


马拉雅拉姆语 (മലയാളം)
ശിഷ്ടരായ മനുഷ്യർ പോൽ തന്നെ കാഴ്ചക്ക് ദുഷ്ടരും ഇതുപോൽ രൂപസാദൃശ്യം കാണ്മതില്ലൊരിടത്തിലും (൲൭൰൧)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಕೀಳು ಜನರು (ಆಕಾರದಲ್ಲಿ) ಮನುಷ್ಯರನ್ನೇ ಹೋಲುತ್ತಾರೆ; ಇಂಥ ಹೋಲಿಕೆ (ಬೇರೆ ಯಾವ ಇಬ್ಬಗೆಯ ವಸ್ತುಗಳಲ್ಲಿಯೂ) ನಾನು ಕಂಡುದಿಲ್ಲ. (೧೦೭೧)

梵语 (संस्कृतम्)
आकारेण समै: साकं नीचानामस्ति तुल्यता ।
इदं साम्यन्त्वन्यवस्तुद्विके द्रष्टुं न शक्यते ॥ (१०७१)


僧伽罗语 (සිංහල)
හැඩයෙන් සමානයි - මිනිසුනටමත් කයවරු නීචවූ ඔවුනට - සම කරත හැකි කෙනෙක් දැක නැත (𑇴𑇰𑇡)

马来语 (Melayu)
Betapa sama rupa mereka dengan manusia, orang2 yang keji ini! Tidak pernah di-lihat persamaan yang sa-tepat itu!
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
천한자는외형에서다른자들과닮았고이러한유사함은어디에서도찾을수없다. (千七十一)

俄語 (Русский)
Все низменные люди похожи, как близнецы. Я никогда не видел людей, столь похожих на них

阿拉伯语 (العَرَبِيَّة)
كيف يقتفى هؤلاء الاصافل الرجال من العظماء مع أنهم متشابهون فى الجسم والشكل؟ (١٠٧١)


法语 (Français)
Les vils ressemblent aux hommes (par la forme). Mais nous n'avons jamais constaté une autre ressemblance comme celle-ci, entre deux espèces.

德語 (Deutsch)
Die Niedrigen gleichen menschlichen Wesen – wir haben nie eine solche Ähnlichkeit gesehen.

瑞典语 (Svenska)
De föraktliga ser precis ut som människor. Aldrig har vi sett en mera slående likhet!
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Viles hominibus sunt similes; quod ipsis simile sit, (vel: quod tam simile sit, sc. hominibus, quam illi) numquarn vidi. (MLXXI)

波兰语 (Polski)
Žli są z twarzy podobni do ludzi uczciwych, Jeno coś ich w nieludzi przemienia.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கயவரைக் கூற வேறு சொல் என்ன? — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

உலகத்தில் வாழும் மக்கள் எல்லோரையும், மக்கள் என்று சொல்கிறோம். உருவத்தால் மக்களாக காணப்படுபவர், பண்பிலும் செயலிலும் மக்களாகவே இருந்தால், பொது வாழ்க்கைக்கு ஒரு கெடுதியும் உண்டாகாது.

வெள்ளோடு பிறந்த பதர் நெல் போலவே இருந்தாலும் உள்ளில் அரிசி இல்லாததால், பதர் என்று சொல்லுகின்றோம் அல்லவா?

அதுபோல, மக்களாகப் பிறந்தும், மக்கள் பண்பு இல்லாதவர்கள் மக்கள் ஆகமாட்டார்கள். அத்தகையவரை கயவர் என்பார்கள்.

உருவம், உறுப்புகள், நடை, உடை, பேச்சு முதலியவற்றால், கயவர் மக்களைப் போல காணப்படுவார்கள்.

ஆனால், அவரை ஒப்புவமைப்படுத்தி சொல்லக்கூடிய பொருள் வேறு ஒன்றையும் நாம் கண்டது இல்லை.

கயவரது இழிவை நகைச்சுவையாக கூறுகிறது.


மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22