息怒

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.   (௩௱௭ - 307) 

憤怒之毁傷一己, 其確實之情形, 猶如以手擊地, 地未傷而手已傷也.  (三百七)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
சினத்தையே செல்வம் என்று நினைத்து மேற்கொண்டவன் அதனாற் கெடுதல், நிலத்திலே அறைந்தவனின் கையானது நோவிலிருந்து தப்பாதது போல் உறுதியாகும் (௩௱௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும். (௩௱௭)
— மு. வரதராசன்


நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது. (௩௱௭)
— சாலமன் பாப்பையா


நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும் அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும் (௩௱௭)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑀺𑀷𑀢𑁆𑀢𑁃𑀧𑁆 𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀯𑀷𑁆 𑀓𑁂𑀝𑀼
𑀦𑀺𑀮𑀢𑁆𑀢𑀶𑁃𑀦𑁆𑀢𑀸𑀷𑁆 𑀓𑁃𑀧𑀺𑀵𑁃𑀬𑀸 𑀢𑀶𑁆𑀶𑀼 (𑁔𑁤𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Sinaththaip Porulendru Kontavan Ketu
Nilaththaraindhaan Kaipizhaiyaa Thatru
— (Transliteration)


ciṉattaip poruḷeṉṟu koṇṭavaṉ kēṭu
nilattaṟaintāṉ kaipiḻaiyā taṟṟu.
— (Transliteration)


He who holds anger worthy will be hurt Like the hands that smash the earth.

印地语 (हिन्दी)
मान्य वस्तु सम क्रोध को, जो माने वह जाय ।
हाथ मार ज्यों भूमि पर, चोट से न बच जाय ॥ (३०७)


泰卢固语 (తెలుగు)
ఆగ్రహమున కార్య మగునని దలచుట
బండను తనచేత బాదినల్లు. (౩౦౭)


马拉雅拉姆语 (മലയാളം)
കോപം മഹത്വമേകുന്ന ഗുണമെന്ന് ധരിച്ചവൻ ദുഃഖിക്കാനിടയാകും കൈ നിലത്തടിച്ചാലെന്നപോൽ (൩൱൭)

卡纳达语 (ಕನ್ನಡ)
ನೆಲಕ್ಕೆ ಕೈಯಪ್ಪಳಿಸಿ ಹೊಡೆದರೆ, ಅದರಿಂದ ಕೈಗೆ ನೋವಾಗುವುದುಹೇಗೆ ತಪ್ಪುವುದಿಲ್ಲವೂ ಹಾಗೆ ಕೋಪವನ್ನು ಬಯಸಿಕೊಂಡವನ ಕೇಡೂ ತಪ್ಪುವುದಿಲ್ಲ. (೩೦೭)

梵语 (संस्कृतम्)
वस्तुना कोपरूपेण स्वप्रभाव प्रकाशक:।
महीं ताडयते हस्त इव नृनं प्रबाध्यते॥ (३०७)


僧伽罗语 (සිංහල)
මහ පොළොවට පහර - දිමෙන් අත පෙළෙනු වැනි කෝපය දනය කොට- ගත්තවුන් වෙතට එන වැනසුම (𑇣𑇳𑇧)

马来语 (Melayu)
Orang yang memelihara rasa marah-nya sa-olah2 rasa itu sa-suatu yang amat berharga ada-lah saperti orang yang memukulkan bumi dengan tangan-nya: tangan-nya tidak akan terlepas daripada luka.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
화난 사람의 파멸은 땅을 타격해서 부상을 입은 손만큼 확실하다. (三百七)

俄語 (Русский)
Неизбежная гибель ждет человека, который цепляется за злобивость. Так неизбежно разрушение руки, которой бьют безрассудно по земле

阿拉伯语 (العَرَبِيَّة)
كما أن الرحل الذي يحفر الأرض يلمس حينا قرستها فكذلك الرجل الذى يربى الغضب ويستحسنه لا يسلم من الجروح فهو سيهلك نهائيا (٣٠٧)


法语 (Français)
Celui qui frappe violemment la terre de sa main, ne peut retirer celle-ci indemne de douleur; de même, celui qui cultive la colère comme une qualité est assuré de sa destruction.

德語 (Deutsch)
Wer den Arger als wertvoll ansieht, den trifft so sicher das Verderben wie die auf den Boden schlagende Hand die Verletzung.

瑞典语 (Svenska)
Den som omhuldar vreden drabbas lika ofelbart av smärta som den hand som slås mot marken.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
lnteritus ejus, qui iram numero bonorum habet , perinde est ae non fallens manus ejus, qui terram ferit. (CCCVII)

波兰语 (Polski)
Ten, co w sercu gniew nosi, podobny jest owym, Co rękami chcą rozbić kamienie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கோபமும் கைவலியும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

ஒருவனுக்கு, யார் மீதோ, எதற்காகவோ கோபம் வந்தது. அந்த ஆத்திரத்தில் கையால் தரையை ஓங்கி அறைந்தான். கையில் வலி உண்டாயிற்று.

அதுபோல, கோபத்தால் பல கெடுதல்கள் ஏற்படும். எந்தக் காரியமும் சுலபமாக முடியாமல்போகும். கோபக்காரனிடம் எவரும் நெருங்கமாட்டார்கள். அப்படிப்பட்டவன் தனித்து இருந்து வேதனை அடைவான்.

தன்னுடைய அதிகாரத் தோரணையைக் காட்டுவதற்குச் சிலர் குடும்பத்தினரிடமோ, வேலை ஆட்களிடமோ கோபத்தை, ஒரு கருவியாகப் பயன்படுத்துவார்கள். அதனால் அவமானமும் துன்பமும் அடைய நேரிடும்.


சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22