克制情緒

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.   (௱௨௰௪ - 124) 

器量大如山嶽者, 由實踐自制而來.  (一百二十四)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
தன் நிலையிலிருந்து திரிந்து போகாமல் அடங்கி இருப்பவனின் தோற்றமானது, மலையைக் காட்டிலும் மிகப் பெரிதான உயர்வு உள்ளதாகும் (௱௨௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும். (௱௨௰௪)
— மு. வரதராசன்


தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது. (௱௨௰௪)
— சாலமன் பாப்பையா


உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும் (௱௨௰௪)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀺𑀮𑁃𑀬𑀺𑀷𑁆 𑀢𑀺𑀭𑀺𑀬𑀸𑀢𑀼 𑀅𑀝𑀗𑁆𑀓𑀺𑀬𑀸𑀷𑁆 𑀢𑁄𑀶𑁆𑀶𑀫𑁆
𑀫𑀮𑁃𑀬𑀺𑀷𑀼𑀫𑁆 𑀫𑀸𑀡𑀧𑁆 𑀧𑁂𑁆𑀭𑀺𑀢𑀼 (𑁤𑁜𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Nilaiyin Thiriyaadhu Atangiyaan Thotram
Malaiyinum Maanap Peridhu
— (Transliteration)


nilaiyiṉ tiriyātu aṭaṅkiyāṉ tōṟṟam
malaiyiṉum māṇap peritu.
— (Transliteration)


More imposing than a mountain Is the stature of the steadfast and self-controlled.

印地语 (हिन्दी)
बिना टले निज धर्म से, जो हो संयमशील ।
पर्वत से भी उच्चतर, होगा उसका डील ॥ (१२४)


泰卢固语 (తెలుగు)
ఊన్న ధర్మమునకు భిన్నత గానట్టి
నిగ్రహ పరుఁజూడ వింగి వంగు (౧౨౪)


马拉雅拉姆语 (മലയാളം)
സ്വന്തം നിലയറിഞ്ഞും കൊണ്ടടങ്ങിക്കഴിയുന്നവൻ ആയുസ്സിലടയും മേന്മ മലയേക്കാളുയർന്നതാം (൱൨൰൪)

卡纳达语 (ಕನ್ನಡ)
ನ್ನ ನೆಲೆಯಲ್ಲಿ ಕದಲದೆ, ಸಂಯಮದಿಂದ ಬಾಳಿದರೆ ಅವನ ಬಾಳು ಪರ್ವತದ ಔನ್ನತ್ಯಕ್ಕಿಂತ ಹಿರಿದಾಗುತ್ತದೆ. (೧೨೪)

梵语 (संस्कृतम्)
सदा निग्रहशीलो य: स्वीयमार्गावलम्बिन: ।
महोन्नता स्थिति स्तस्य शैलादप्यधिका भवेत् ॥ (१२४)


僧伽罗语 (සිංහල)
නියම ගිහිකම රැක- කෙනෙක් දමනය වූ නම් උසස් වේ සැමවිට - මහා ගිරිකූළ උසට වැඩියෙන් (𑇳𑇫𑇤)

马来语 (Melayu)
Amati-lah manusia yang berjaya mengatasi nafsu-nya dan tidak me- lupakan tugas-nya pula: diri-nya lebeh gagah daripada sa-buah gu- nong.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
자제력을 실천하는 사람은 산의 위대함과 견고함보다 더 크다. (百二十四)

俄語 (Русский)
Величие человека, умеющего обуздать свои порывы, не сворачивающего со стези добра, вознесет его выше самых высоких гор.

阿拉伯语 (العَرَبِيَّة)
الرجل الذى يمارس ضبط النفس ولا يقصر فى أداء واجباته يفوق الجبل السامخ عظمة وقدرا (١٢٤)


法语 (Français)
La grandeur de l’homme qui, se maintenant dans la vie familiale, est modeste, est plus imposante que celle da montagne.

德語 (Deutsch)
Wer nicht von seinem Bestimmtsein weicht und sich beherrscht, dessen Größe ist größer als ein Berg.

瑞典语 (Svenska)
Högre än bergen når dens storhet som utan att svikta övar sinnenas behärskning.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Qui in statu suo immotus se ipsum continet, ejus species monte multo excelsior est. (CXXIV)

波兰语 (Polski)
Szczytu gór zaśnieżonych, zaiste, dosięże, Kto swe zmysły okiełzna i zdławi.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அடக்கமும் மலையும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

ஏழ்மை நிலைமையிலிருந்தவனுக்கு எப்படியோ செல்வம் வந்து சேருகிறது.

வேலை கிடைக்காமல் ஏங்கி கொண்டிருந்தவளுக்கு பெரிய வேலை கிடைக்கிறது. சிறிய உத்தியோகத்தில் இருந்தவன் பதவி உயர்வு பெறுகிறான்.

இப்படியாக உயர்நிலையை எட்டியவர்கள் உறுதியான கொள்கையுடன் தங்களுடைய முந்திய நிலை மாறாமல், அடக்கத்தோடு நடந்துகொள்கின்றவர்களை மக்கள் எவ்வாறு மதிப்பார்கள் என்றால்,

தன்னிச்சையாக, கர்வத்தோடு, ஆடம்பரமாக நடந்து கொள்ளாமல் தன் நிலையை உணர்ந்து பணிவுடன் நடப்பவரைக் கம்பீரமான மலையை விடப் பெரிதாக போற்றுவார்கள்.

(இன்றைய நிலைமையில், அத்தகையோர் எத்தனை பேர்?)


நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22