大道

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.   (௩௰௭ - 37) 

奉道之善果爲何? 但觀於乘輿者與肩輿者卽可知之矣.  (三十七)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
சிவிகையைச் (பல்லக்கு) சுமப்பவனோடு, அதனில் அமர்ந்து செல்பவன் ஆகியவரிடையே, ‘அறத்தின் வழி இதுதான்’ என்று கூற வேண்டாம் (௩௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா. (௩௰௭)
— மு. வரதராசன்


அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம். (௩௰௭)
— சாலமன் பாப்பையா


அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள் தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள் (௩௰௭)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑀢𑁆𑀢𑀸𑀶𑀼 𑀇𑀢𑀼𑀯𑁂𑁆𑀷 𑀯𑁂𑀡𑁆𑀝𑀸 𑀘𑀺𑀯𑀺𑀓𑁃
𑀧𑁄𑁆𑀶𑀼𑀢𑁆𑀢𑀸𑀷𑁄𑀝𑀼 𑀊𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀷𑁆 𑀇𑀝𑁃 (𑁝𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Araththaaru Ithuvena Ventaa Sivikai
Poruththaanotu Oorndhaan Itai
— (Transliteration)


aṟattāṟu ituveṉa vēṇṭā civikai
poṟuttāṉōṭu ūrntāṉ iṭai.
— (Transliteration)


Inquiring about virtues' benefits?See that between The rider and bearer of a palanquin.

印地语 (हिन्दी)
धर्म-कर्म के सुफल का, क्या चाहिये प्रमाण ।
शिविकारूढ़, कहार के, अंतर से तू जान ॥ (३७)


泰卢固语 (తెలుగు)
పల్లకి నొకఁడెత్త పైనుండు నొక్కఁడు
ధర్మ మింతె యనుచుఁ దలచరాదు. (౩౭)


马拉雅拉姆语 (മലയാളം)
ധർമ്മത്താലുളവാം മേന്മയെന്തെന്നോതാതറിഞ്ഞിടാം പല്ലക്കേറ്റിനടപ്പോർക്ക് യാത്രികൾ തുല്യരാകുമോ? (൩൰൭)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಧರ್ಮದ ಫಲ ಇದೆಂದು ವ್ಯರ್ಥವಾಗಿ ವರ್ಣಿಸಬೇಡ. ಪಲ್ಲಕ್ಕಿ ಹೊರುವವನಲ್ಲಿ ಮತ್ತು ಪಲ್ಲಕ್ಕಿಯಲ್ಲಿ ಕುಳಿತಿರುವವನಲ್ಲಿ ನೋಡು. (೩೭)

梵语 (संस्कृतम्)
शिबिकावाहकं हष्टवा तत्रत्यञ्च समक्षत: ।
धर्मप्रभावे सुज्ञेये कुत: शास्त्रं कुत: श्रुति: ॥ (३७)


僧伽罗语 (සිංහල)
දැහැමි නොදැහැමි පල- මේ යැයි දැන ගැනුම් වස් දෝලාව උසුලනු - වාඩි වි යනු දැක්ම සෑහෙයි (𑇬𑇧)

马来语 (Melayu)
Jangan-lah bertanya kapada-ku, apa-kah untong-nya orang sa-kira- nya ia jujor? Perhatikan-lah si-pembawa pelangki dan orang yang menaiki-nya.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
가마를 운반하는 사람과 가마 안에 있는 사람은 과거의 행위에서 보상을 받는다. (三十七)

俄語 (Русский)
Толковать о результатах дхармы — зряшное занятие. Разница между уклоняющимся от добродетели и следующим ее сути такая же, как между тем, кто несет паланкин и сидящем в нем

阿拉伯语 (العَرَبِيَّة)
لماذا تطلب ثمرة الدين؟ انظر إلى من هو فى محفة والذين يحملونـها (٣٧)


法语 (Français)
Point n’est besoin de faire connaitre le profit de la vertu; on le constate chez celui qui porte le palanquin (chaise à porteur) et chez celui qui y est assis.

德語 (Deutsch)
Die Früchte des dharma brauchen nicht beschrieben zu werden; sie zeigen sich beim bloßen Anblick des Sänftenträgers und des Insassen.

瑞典语 (Svenska)
Fråga icke: ”Vad blir dygdens belöning?” utan jämför blott den som får bära bärstolen och den som låter sig bäras i den.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Qualis via virtutis sit, non opus est dicere; (cernere licet) in eo, qui in lectica gestatur et in bajulo, qui eum gestat. (Nam qui gestatur meriti in existentia priori conflati mercedem, bajulus demeriti poe-nam ostendit). (XXXVII)

波兰语 (Polski)
Nie bądź tym, co się rozparł i śpi w palankinie, Kiedy inni dźwigają go w pocie...
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஏற்றத் தாழ்வு ஏன்? — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

அந்தக் காலத்தில், அரசர்களையும், மடாதிபதிகளையும் பல்லக்கில் அமரச்செய்து ஆட்கள் சுமந்து செல்வது வழக்கமாக இருந்தது.

(இந்தக் காலத்தில் அந்த வழக்கம் அடியோடு ஒழிந்தது)

"இப்படி செய்வது (பல்லக்கில் இருப்பதும் சுமப்பதும்) நல்வினை, தீவினையால் என்றும் நினைக்க வேண்டாம். அத்தகைய ஏற்றத் தாழ்வு, தொழில் தகுதியை காட்டுகிறது."

குறிப்பு: கல் உடைத்தல், மரம் வெட்டுதல், கிணறு தோண்டுதல், பாதாளச் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்தல் முதலான கடின வேலைகள் யாவும் அவரவர் தொழில் வலிமையை காட்டுகின்றன. மேலும், சுயநலம் குறைந்து, பொதுநலம் கருதி செய்கின்ற தொண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

விதியின் பயன் என்று சொல்லிக்கொண்டிருப்பது பொருத்தமற்றது. அது அறியாமை.


அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22