出世

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.   (௨௰௪ - 24) 

人以堅定意志克制其五欲; 若以韁繩引象者, 此人已具 入天國之善根.  (二十四)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காப்பவன் எவனோ, அவனே மேலான வீட்டுலகிற்கு ஒரு வித்து ஆவான் (௨௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன் (௨௰௪)
— மு. வரதராசன்


மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான் (௨௰௪)
— சாலமன் பாப்பையா


உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான் (௨௰௪)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀭𑀷𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀢𑁄𑀝𑁆𑀝𑀺𑀬𑀸𑀷𑁆 𑀑𑀭𑁃𑀦𑁆𑀢𑀼𑀫𑁆 𑀓𑀸𑀧𑁆𑀧𑀸𑀷𑁆
𑀯𑀭𑀷𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀯𑁃𑀧𑁆𑀧𑀺𑀶𑁆𑀓𑁄𑀭𑁆 𑀯𑀺𑀢𑁆𑀢𑀢𑀼 (𑁜𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Uranennum Thottiyaan Oraindhum Kaappaan
Varanennum Vaippirkor Viththu
— (Transliteration)


uraṉeṉṉum tōṭṭiyāṉ ōraintum kāppāṉ
varaṉeṉṉum vaippiṟkōr vittatu.
— (Transliteration)


The restraint of senses five by the ankush of firmness Is the seed for the bliss of heaven.

印地语 (हिन्दी)
अंकुश से दृढ़ ज्ञान के, इन्द्रिय राखे आप ।
ज्ञानी वह वर लोक का, बीज बनेगा आप ॥ (२४)


泰卢固语 (తెలుగు)
చిత్త మంకుశముగఁ జేసి యైదింటిని
నణఁచు నతఁడు మోక్షమునకు విత్తు (౨౪)


马拉雅拉姆语 (മലയാളം)
ജ്ഞാനമാമായുധത്താലേ പഞ്ചേന്ത്രിയ ഗജങ്ങളെ അടക്കിവാഴും ശക്തൻതാൻ മോക്ഷമർഹിച്ചിടുന്നവൻ (൨൰൪)

卡纳达语 (ಕನ್ನಡ)
ದೃಢನಿಶ್ಚಯದಿಂದ ಐದಿಂದ್ರಿಯಗಳನ್ನು ಕಡಿವಾಣ ಹಾಕಿ ಕಾಪಾಡುವವನು, ವರನಿಧಿಯಾದ ಮೋಕ್ಷಕ್ಕ್ ಬೀಜದಂತೆ (೨೪)

梵语 (संस्कृतम्)
धैर्याङ्कुशेन् संयम्य गजान् पञ्चेन्द्रियात्मकान् ।
य: पालयत्ययं मोक्षफलकृद्वीजवद्भवेत् ॥ (२४)


僧伽罗语 (සිංහල)
පසිඳුරන් දමනය - නුවණින්ම කළ උතූමෝ මාහැඟි අනගි තම - දෙව් බවට බිජුවටෙක් වෙත්මැයි (𑇫𑇤)

马来语 (Melayu)
Awasi-lah orang yang dengan keazaman-nya yang tegoh menguasai panchaindera-nya saperti angkusa menguasai gajah: dia-lah beneh yang sesuai untok ladang di-shurga.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
지혜로서 모든 오감을 통제하는 자는 하늘에서 내린 축복의 씨앗이다. (二十四)

俄語 (Русский)
Семенем вечного блаженства является тот, кто способен усмирить пять чувств с помощью коромысла воли

阿拉伯语 (العَرَبِيَّة)
إن الذى يتحكم فى حواسه الخمسة هو بنفسه نواة للنعيم الخالد ونواة للخالدين الذين يتحكمـون فى حواسهم الخمسة (٢٤)


法语 (Français)
Celui qui, grâce au croc de l’energie, protège les cinq (sens) est une semence pour le champ meilleur du Ciel.

德語 (Deutsch)
Wer seine fünf Sinne mit der Weisheit Rute beherrscht, ist Same im Feld der Erlösung.

瑞典语 (Svenska)
Den som styr sina fem sinnen i visdomens ledband blir ett frö i himmelens åker.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Qui stimulo. qui dicitur fortitudo (sapientia). quinque (sensus) frae-nat, is agro, qui dicitur "deliciate", (i. e. coelo) semen est. (XXIV)

波兰语 (Polski)
Twardą uzdą potrafi bieg życia odmieniać, Uprawiając swą duszę jak pole.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மகான்கள் யார்? — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

விவசாயிகள், நிலத்தில் விதைப்பதற்கு விதை நெல்லைச் சேமித்து வைத்திருப்பார்கள். பிறகு அதைப் பயன்படுத்துவார்கள்.

அதுபோல, உறுதி என்ற தோட்டியால், மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து இந்திரியங்களான மதயானைகளை அடக்கி ஆண்டு உலகத்திற்கு நன்மை செய்யக் கூடிய வலிமை மிக்கவர்கள் ஆவார்கள். துறவிகள் புலனடக்கியவர்களே உறுதியாக வீடு பேறடைவார்கள்.

அத்தகையவர்களே மகான்கள் என்று போற்றப்படுவார்கள்.


உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22