புலவி

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.   (௲௩௱௪ - 1304) 

ஊடிப் பிணங்கியவரைத் தெளிவித்து அன்பு செய்யாமல் கைவிடுதல், முன்பே நீரில்லாது வாடிப் போன வள்ளிக் கொடியின் வேரை அறுப்பது போன்றது ஆகும்  (௲௩௱௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.  (௲௩௱௪)
— மு. வரதராசன்


தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.  (௲௩௱௪)
— சாலமன் பாப்பையா


ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்  (௲௩௱௪)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀊𑀝𑀺 𑀬𑀯𑀭𑁃 𑀉𑀡𑀭𑀸𑀫𑁃 𑀯𑀸𑀝𑀺𑀬
𑀯𑀴𑁆𑀴𑀺 𑀫𑀼𑀢𑀮𑀭𑀺𑀦𑁆 𑀢𑀶𑁆𑀶𑀼 (𑁥𑁔𑁤𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Ooti Yavarai Unaraamai Vaatiya
Valli Mudhalarin Thatru
— (Transliteration)


ūṭi yavarai uṇarāmai vāṭiya
vaḷḷi mutalarin taṟṟu.
— (Transliteration)


To ignore a lady in pout is to cut An already withering climber at its root.

ஹிந்தி (हिन्दी)
उसे मनाया यदि नहीं, जो कर बैठी मान ।
सूखी वल्ली का यथा, मूल काटना जान ॥ (१३०४)


தெலுங்கு (తెలుగు)
పొలతి నలుక బాపి బుజ్జగింపక యున్న
లతను వ్రేళ్ళతోడ లాగినట్లు. (౧౩౦౪)


மலையாளம் (മലയാളം)
പിണക്കം കൂടിദ്വെഷ്യത്തോടിണങ്ങാതെ കഴിഞ്ഞിടൽ നീരറ്റുവാടി നിൽക്കുന്ന ലതയിൻ വേരറുക്കലാം (൲൩൱൪)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಪ್ರಣಯ ಕಲಹದಲ್ಲಿ ಮುನಿಸಿಕೊಂಡವರನ್ನು ಸಮಾಧಾನಪಡಿಸಿ ಪ್ರೀತಿ ತೋರದಿರುವುದು ಮೊದಲೇ ಬಾಡುತ್ತಿರುವ ಬಳ್ಳಿಯ ಬೇರನ್ನೇ ಕತ್ತರಿಸಿ ಹಾಕಿದಂತೆ. (೧೩೦೪)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
गातां स्त्रियं समाश्वास्य मेलनं न क्रियेत् चेत् ।
स्वतो म्लानलतायास्तन्मूलविच्छेदवद्भवेत् ॥ (१३०४)


சிங்களம் (සිංහල)
මුල සිඳ දැමුම මෙනි - මැලවුණු කොසොල් වැල් හී මඳක් කලකිරුණකු - නො සැනසීමෙන් වනස ගෙන දේ (𑇴𑇣𑇳𑇤)

சீனம் (汉语)
若婦女已故作冷淡, 而男子不加撫慰, 如見枯草而斷其根也. (一千三百四)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Apabila kau kembali dengan tidak chuba menghibori orang yang merajok, itu sama-lah saperti memotong akar pada pokok yang se- dang kedahagaan.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
시무룩한처녀를위로하지않는것은시든덩굴식물의뿌리를자르는것과같다. (千三百四)

உருசிய (Русский)
Не утешать притворно гневающуюся на тебя милую — это все равно, что вырывать с корнем немного увядший цветок

அரபு (العَرَبِيَّة)
الخروج من عندها بغير مفاهمة معها وهي فى حالة ذبولها مثله كمثل من يقطع جدور شجرة لا يستقيها أحد (١٣٠٤)


பிரெஞ்சு (Français)
Ne pas se concilier avec celle qui boude et ne pas s’unir ensuite à elle, équivalent à couper par les racines la liane, qui dépérit faute d'eau.

ஜெர்மன் (Deutsch)
Sich nicht mit ihr zu versöhnen, die Abneigung vortäuscht, ist gleich dem Abschneiden einer verdorrten Kriechpflanze an ihrer Wurzel.

சுவீடிய (Svenska)
Att icke älska dem som låtsas motstå kärleksleken är som att hugga av ett vissnande skott vid roten.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Cum submorosis in gratiam non redire simile est ac si herbae serpenti jam flaccidae radicem subtrahas. (MCCCIV)

போலிய (Polski)
Jak byś gniewem pałając, odcinał korzenie Pnączy, które już uschły bez mała.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22