நிறையழிதல்

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.   (௲௨௱௫௰௯ - 1259) 

ஊடுவேன் என்று நினைத்துச் சென்றேன்; ஆனால், என் நெஞ்சம் என்னை மறந்து அவரோடு சென்று கலந்து விடுவதைக் கண்டு, அவரைத் தழுவினேன்  (௲௨௱௫௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன்.  (௲௨௱௫௰௯)
— மு. வரதராசன்


அவர் வந்தபோது ஊடல் கொள்ளலாம் என்று எண்ணி, அவர்முன் நில்லாது அப்பால் போனேன்; நான் போன போதும், என் நெஞ்சம் அடக்கம் இல்லாமல் அவரோடு கலக்கத் தொடங்குவதைக் கண்டு இனி அது முடியாது என்று அவரைத் தழுவினேன்.  (௲௨௱௫௰௯)
— சாலமன் பாப்பையா


ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்  (௲௨௱௫௰௯)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀼𑀮𑀧𑁆𑀧𑀮𑁆 𑀏𑁆𑀷𑀘𑁆𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀧𑀼𑀮𑁆𑀮𑀺𑀷𑁂𑀷𑁆 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀫𑁆
𑀓𑀮𑀢𑁆𑀢𑀮𑁆 𑀉𑀶𑀼𑀯𑀢𑀼 𑀓𑀡𑁆𑀝𑀼 (𑁥𑁓𑁤𑁟𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Pulappal Enachchendren Pullinen Nenjam
Kalaththal Uruvadhu Kantu
— (Transliteration)


pulappal eṉacceṉṟēṉ pulliṉēṉ neñcam
kalattal uṟuvatu kaṇṭu.
— (Transliteration)


Determined to sulk I went, but when my heart merged, I too went and clasped him.

ஹிந்தி (हिन्दी)
चली गई मैं रूठने, किन्तु हृदय को देख ।
वह प्रवृत्त है मिलन हित, गले लगी, हो एक ॥ (१२५९)


தெலுங்கு (తెలుగు)
కోపదంచఁ జోతి గోపించు నంతలో
మనసు దీర నతని మరలు గొంటి (౧౨౫౯)


மலையாளம் (മലയാളം)
പിണങ്ങിനിൽക്കണമെന്നായ് നിശ്ചയിച്ചെങ്കിലും മനം എന്നെ വിട്ടവരോടൊട്ടി നിൽപ്പു കണ്ടു ഭ്രമിച്ചു ഞാൻ (൲൨൱൫൰൯)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಅವರನ್ನು ದ್ವೇಷಿಸುತ್ತೇನೆಂದುಕೊಂಡು ಅವರಿಂದ ದೂರ ಸಾರಿದೆ; ಆದರೆ ನನ್ನ ಮನಸ್ಸು ಅವರೊಡನೆ ಕೂಡಲು ತವಕಗೊಳ್ಳುತ್ತಿರುವುದನ್ನು ಅರಿತು ಬಿಳಿಸಾರಿ ಅಪ್ಪಿಕೊಂಡೆ. (೧೨೫೯)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
प्रिये समागते त्यक्त्वा तमन्यत्नागमं क्रुधा ।
मच्चित्ते तेन संयुक्ते त्वलभे तेन सङ्गमम् ॥ (१२५९)


சிங்களம் (සිංහල)
සිප වැළඳ නො ගනිමි - යනුවෙන් සිතා පිවිසී සිත ඇලුණු බව දැක - නැවත මායා දැලෙහි බැඳුණෙමි (𑇴𑇢𑇳𑇮𑇩)

சீனம் (汉语)
本思一怒棄之而去, 心爲所繫, 又投其懷. (一千二百五十九)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Aku ingin lari untok menyinggongi-nya: tetapi aku pergi memelok- nya, kerana ku-lihat hati-ku telah berpadu dengan-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
그녀는그를싫어하는척하려고저기로갔다. 그러나 그를보면서껴안았다. (千二百五十九)

உருசிய (Русский)
Я попыталась скрыть от него свою страсть, но вместо этого жарко обняла его, и наши сердца слились

அரபு (العَرَبِيَّة)
أنا فارقت منه مغضبة ولكن وجدت نفصى راغبة فى عناقه معى لأن قلبى كان مائلا إليه ويود أن أتصل به (١٢٥٩)


பிரெஞ்சு (Français)
(Lorsqu'il est arrivé), résolue à le bouder, je l'ai fui. Mais j'ai senti que mon cœur commençait à s'unir à lui: aussi l'ai-je embrassé.

ஜெர்மன் (Deutsch)
Ich war daran, einen Streit mit ihm anzufangen, aber ich umarmte ihn und sah, daß sich mein Herz mit ihm vereinte.

சுவீடிய (Svenska)
Jag gick min väg fast besluten att motstå hans inviter. Men när jag fann att mitt hjärta gick honom tillmötes föll jag i hans armar.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
,,Amorem recusare volo" ita dicens ilium vitabam. Cum autcm viderem animum meum ad complexum currere , (eum) ample-ctebar. (MCCLIX)

போலிய (Polski)
W każdej chwili porzucę swe mroczne więzienie, By doń pobiec pokorna i karna.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22