உறுப்புநலன் அழிதல்

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.   (௲௨௱௩௰௭ - 1237) 

நெஞ்சமே! கொடியவராகிவிட்ட காதலருக்கு என் வாடிய தோள்களின் ஆரவாரத்தை எடுத்துச் சொல்லி உதவியைச் செய்ததனால், நீயும் பெருமை அடையாயோ!  (௲௨௱௩௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?  (௲௨௱௩௰௭)
— மு. வரதராசன்


நெஞ்சே! கொடுமையானவராகிய அவரிடம் சென்று என் மெலியும் தோள்களினால் ஏற்பட்டுள்ள வெற்றுரைகளைச் சொல்லி நீ பெருமை பெறுவாயோ?  (௲௨௱௩௰௭)
— சாலமன் பாப்பையா


நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?  (௲௨௱௩௰௭)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀸𑀝𑀼 𑀧𑁂𑁆𑀶𑀼𑀢𑀺𑀬𑁄 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑁂 𑀓𑁄𑁆𑀝𑀺𑀬𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑁂𑁆𑀷𑁆
𑀯𑀸𑀝𑀼𑀢𑁄𑀝𑁆 𑀧𑀽𑀘𑀮𑁆 𑀉𑀭𑁃𑀢𑁆𑀢𑀼 (𑁥𑁓𑁤𑁝𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Paatu Perudhiyo Nenje Kotiyaarkken
Vaatudhot Poosal Uraiththu
— (Transliteration)


pāṭu peṟutiyō neñcē koṭiyārkkeṉ
vāṭutōṭ pūcal uraittu.
— (Transliteration)


Can you, O heart, gain glory by relating that cruel man The woes of my fading shoulders?

ஹிந்தி (हिन्दी)
यह आक्रान्दन स्कंध का, जो होता है क्षाम ।
सुना निठुर को रे हृदय, पाओ क्यों न सुनाम ॥ (१२३७)


தெலுங்கு (తెలుగు)
గొప్పబడవె మనస చెప్పుచు ప్రియునితో
చెన్ను దఱిగెనంచు చేతులెల్ల. (౧౨౩౭)


மலையாளம் (മലയാളം)
സ്‌കന്ധദേശം മെലിഞ്ഞേറെ ഞെരുങ്ങീടുന്ന ചെയ്തികൾ ദുഷ്ടകാമുകനോടോ താൻ ദയകാട്ടുക നെഞ്ചമേ (൲൨൱൩൰൭)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಓ ನನ್ನ ಹೃದಯವೇ! ನಿರ್ದಯನಾದ ಇನಿಯನಿಗೆ ನನ್ನ ಕೃಶವಾದ ತೋಳುಗಳ ಗೋಳನ್ನು ಒರೆದು ಪುಣ್ಯವನ್ನು ಕಟ್ಟಿಕೊಳ್ಳಲಾರೆಯಾ? (೧೨೩೭)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
हे चित्त ! भुजयो: कार्श्यं निर्दयाय प्रियाय मे ।
विनिवेद्य ततो जातं महत्त्वं प्राप्यतां त्वया ॥ (१२३७)


சிங்களம் (සිංහල)
හැකුළුනු උරය ගැන - නපුරාට සිත මුමුණා ආ ෟ සිතේ ෟ ඔබහට - උසස් බව ලැබෙනුයේ කෙලෙස ද? (𑇴𑇢𑇳𑇬𑇧)

சீனம் (汉语)
心乎! 欲獲光榮, 應奔向良人, 告以瘦減之狀, 與他人之評論. (一千二百三十七)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Ingin-kah kau menchapai kemuhaan O Hati-ku? Kalau bagitu kejar- lah si-kejam yang telah timbul di-sini kerana anggota-ku yang kurus kering ini.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
그녀의마음은헤어진무정한애인에게비참한메시지를전해야 하고그럼으로써영예를얻어야한다. (千二百三十七)

உருசிய (Русский)
Сердце мое! Возвести моему жестокосердному мужу о моих исхудавших руках и обрести славу

அரபு (العَرَبِيَّة)
هل تريد يا قلبى أن تصل إلى مكانك الرفيع؟ فاذن إذهب ألى الحبيب الظالم وإخبره بأن الناس يتحدثون عنه بسبب نحولـة أذرعى (١٢٣٧)


பிரெஞ்சு (Français)
O mon cœur ! Ne peux-tu pas acquérir la gloire, en disant à mon cruel mari, le bruit que fait (en ville) le dépérissement de mes bras?

ஜெர்மன் (Deutsch)
Mein Herz, gewinnst du Ruhm, wenn du dem Grausamen das Schelten meiner schwindenden Schultern erzählst?

சுவீடிய (Svenska)
Vill du, mitt stackars hjärta, vinna berömmelse, så ila och berätta för den kallsinnige om det prat som här har uppstått för min vissnade skönhets skull.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Domina, quia reprehensionern illius tolerare non potest, secum dlicit: Cor meum ! si duro illi clamorem tabesceutium humerorum enun-ties, u um magni fies ? (MCCXXXVII)

போலிய (Polski)
Niechaj serce przekaże mu prawdę nikczemną, Jak zmarniałam tu z jego powodu...
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட் பூசல் உரைத்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22