உறுப்புநலன் அழிதல்

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.   (௲௨௱௩௰௧ - 1231) 

இந்தத் துன்பத்தை நமக்கு விட்டுவிட்டுத் தொலைவாகச் சென்றுவிட்ட காதலரை நினைத்து அழுவதனாலே, என் கண்கள், தம் அழகிழந்து நறுமலர்களுக்கு நாணின  (௲௨௱௩௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.  (௲௨௱௩௰௧)
— மு. வரதராசன்


பிரிவைப் பொறுக்காத சிறுமை என்னோடு இருக்கப் பிரிவைப் பொறுத்துக் கொண்டு தொலைவில் சென்று அவரை எண்ணி அழுவதால், கண்கள் ஒளி இழந்துவிட்டன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட மண மலர்களுக்கு இப்போது கண்கள் வெட்கப்பட்டுவிட்டன.  (௲௨௱௩௰௧)
— சாலமன் பாப்பையா


பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன  (௲௨௱௩௰௧)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑀺𑀶𑀼𑀫𑁃 𑀦𑀫𑀓𑁆𑀓𑁄𑁆𑀵𑀺𑀬𑀘𑁆 𑀘𑁂𑀝𑁆𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀸𑀭𑁆 𑀉𑀴𑁆𑀴𑀺
𑀦𑀶𑀼𑀫𑀮𑀭𑁆 𑀦𑀸𑀡𑀺𑀷 𑀓𑀡𑁆 (𑁥𑁓𑁤𑁝𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Sirumai Namakkozhiyach Chetchendraar Ulli
Narumalar Naanina Kan
— (Transliteration)


ciṟumai namakkoḻiyac cēṭceṉṟār uḷḷi
naṟumalar nāṇiṉa kaṇ.
— (Transliteration)


To lift us from want, he left us afar. Brooding over him, Your eyes now quail before flowers.

ஹிந்தி (हिन्दी)
प्रिय की स्मृति में जो तुझे, दुख दे गये सुदूर ।
रोते नयन सुमन निरख, लज्जित हैं बेनूर ॥ (१२३१)


தெலுங்கு (తెలుగు)
ఏడ్చి యేడ్చి ప్రియుని యెడబాటు కోర్వక
కనులు చిన్నవోయె కలువ లెదుట. (౧౨౩౧)


மலையாளம் (മലയാളം)
ദൂരസ്ഥൻ നാഥനെ ചിന്തിച്ചെപ്പോഴും കരയുന്നതാൽ ഒളിമങ്ങിയ കൺരണ്ടും മലർ മുന്നിൽ ലജ്ജിക്കയാം (൲൨൱൩൰൧)

கன்னடம் (ಕನ್ನಡ)
ನಮ್ಮನ್ನು ಈ ವಿರಹ ದುಃಖವು ಬಾಧಿಸುವಂತೆ, ಬಹು ದೂರ ಅಗಲಿ ಹೋದ ನಿನ್ನ ಪ್ರಿಯತಮಯನ್ನು ನೆನೆದು ಅತ್ತು ಸೊರಗಿರುವ ನಿನ್ನ ಕಣ್ಣುಗಳು; ಸೌಂದರ್ಯವನ್ನು ಕಳೆದುಕೊಂಡು, ನರುಗುಂಪಿನ ಹೊಗಳನ್ನು ಕಂಡು ನಾಚಿಗೊಳ್ಳುತ್ತಿವೆ. (೧೨೩೧)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
वियोगखेदं दत्वा मे दूरदेशं ययौ प्रिय: ।
तं स्मृत्वा रोदनान्नेत्रे पुष्पै: स्यातां जितेऽधुना ॥ (१२३१)


சிங்களம் (සිංහල)
මා දුක් සිඳ දමන - අටියෙන් බැහැර යන ලද සැමියා ගැන සිතා - දෙනෙත පැරදුනී සුවඳ කුසුමට (𑇴𑇢𑇳𑇬𑇡)

சீனம் (汉语)
頁人遠遊, 謂能增加幸福, 止妾涕泣, 妾目失其光澤而趨慘淡. (一千二百三十一)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Mata-ku terbayangkan dia yang meninggalkan-ku dengan berkata ia pergi sa-mata2 untok menambahkan lagi kebahagiaan-ku, dan terasa malu untok menunjokkan muka-nya di-hadapan bunga.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
멀리떠난, 애인을생각하면서, 그녀의눈은우아함을잃었고꽃을보기가두렵다. (千二百三十一)

உருசிய (Русский)
Страдая от разлуки с любимым, мои глаза стыдятся посмотреть на цветущий лотос *

அரபு (العَرَبِيَّة)
عيناي تتفكران عن الحبيب الذى قـد فارق عنى قائلا لانه يذهب للإكتناز الثروة ذات بهجة ومسرة لى إنهما الآن تستحيان من أن تنظرا الى الأزهار (١٢٣١)


பிரெஞ்சு (Français)
C'est moi qui souffre de cette séparation; cependant, mes yeux, à force de (pleurer) pensant à celui qui est parti au loin, (ont perdu leur éclat et) ont rougi devant les fleurs odoriférantes, qui rougissaient devant eux.

ஜெர்மன் (Deutsch)
Nach dem Weinen um den, der dich in schmerzvoller Pein verließ, scheuen sich die Augen vor der blühenden Blume.

சுவீடிய (Svenska)
Medan jag ständigt tänker på honom som har färdats så långt för att råda bot på vår fattigdom har mina ögon förlorat sin glans så att de måste skämmas inför de doftande blommorna.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Dominae propter magnam sollicituclinem mutatae socia elicit: Ejus mernores , qui procul discedens clolorem no bis relinquit, oculos tuos venustatis florum puclet (MCCXXXI)

போலிய (Polski)
Myśląc o nim oczy spłakane zasłania, Nie śmie spojrzeć na kwiaty, nieboga.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22