பொழுதுகண்டு இரங்கல்

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.   (௲௨௱௨௰௧ - 1221) 

பொழுதே! நீ மாலைக் காலமே அல்லை; காதலரோடு கூடியிருந்து, பிறகு பிரிவால் கலங்கியிருக்கும் மகளிரின் உயிரையுண்ணும் முடிவு காலமே ஆவாய்!  (௲௨௱௨௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!  (௲௨௱௨௰௧)
— மு. வரதராசன்


பொழுதே! நீ வாழ்க! முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா நீ என்றால் இல்லை; திருமணம் செய்து கொண்ட பெண்களின் உயிரை வாங்கும் பொழுது நீ.  (௲௨௱௨௰௧)
— சாலமன் பாப்பையா


நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!  (௲௨௱௨௰௧)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀸𑀮𑁃𑀬𑁄 𑀅𑀮𑁆𑀮𑁃 𑀫𑀡𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀉𑀬𑀺𑀭𑀼𑀡𑁆𑀡𑀼𑀫𑁆
𑀯𑁂𑀮𑁃𑀦𑀻 𑀯𑀸𑀵𑀺 𑀧𑁄𑁆𑀵𑀼𑀢𑀼 (𑁥𑁓𑁤𑁜𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Maalaiyo Allai Manandhaar Uyirunnum
Velainee Vaazhi Pozhudhu
— (Transliteration)


mālaiyō allai maṇantār uyiruṇṇum
vēlainī vāḻi poḻutu.
— (Transliteration)


Farewell, evening! You are no more just, For you devour the souls of brides!

ஹிந்தி (हिन्दी)
तेरी, सांझ, चिरायु हो, तू नहिं संध्याकाल ।
ब्याह हुओं की जान तू, लेता अन्तिम काल । (१२२१)


தெலுங்கு (తెలుగు)
సంధ్య సంధ్య కాదు చంపంగ వచ్చిన
గాల మగునుగాదె కాముకులను. (౧౨౨౧)


மலையாளம் (മലയാളം)
കാമികൾ സംഗമിക്കുന്ന മധുസായാഹ്നമല്ല നീ വിരഹത്താൽ തപിപ്പോരെ ഹനിക്കുന്ന മുഹൂർത്തമാം (൲൨൱൨൰൧)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಸಂಧ್ಯಾ ಸಮಯವೇ ನೀನು ನೂರ್ಗಾಲ ಬಾಳು! ನೀನು ಸಂಧ್ಯಾ ಕಾಲವೆ? ಅಲ್ಲ, ವಿರಹದಿಂದ ಸೊರಗಿದ ವಿವಾಹಿತ ಸ್ತ್ರೀಯರ ಪ್ರಾಣವನ್ನು ಹೀರುವ ಪ್ರಳಯ ಕಾಲ ನೀನು! (೧೨೨೧)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
संयुज्याथ वियुक्तानां नारोणां कामुकै: सह ।
प्राणभुग्यमरूपस्त्वं सायङ्काल ! विभासि मे ॥ (१२२१)


சிங்களம் (සිංහල)
එම්බා, සවස ඔබ ෟ - වේලා යුදය සරි වේ විවාවූ වියොවුන් - පණ නසනුවස් එනු ද? ඔබ දැන් (𑇴𑇢𑇳𑇫𑇡)

சீனம் (汉语)
黃昏乎! 爾不似舊日之使人歡樂, 爾實足呑沒離人之生命也. (一千二百二十一)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Berkat-lah dikau, O Senja-kala! Tetapi siapa-lah yang memanggil- mu Senja-kala? Kau sa-benar-nya waktu yang menelan kehidupan mereka yang berumah-tangga.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
저녁은남편과이별한아내를괴롭히는최악의시간이다. (千二百二十一)

உருசிய (Русский)
Вечер! Пусть снизойдет на тебя благодать Божия! Раз ве ты вечер? Нет,,ы — это часы, которые поглощают жизнь супругов, находящихся в разлуке

அரபு (العَرَبِيَّة)
ما أسعدك أيها الأصيل ! من يسميك الأصيل إنك سـاعـة تبتلع نفوس الزوجـات (١٢٢١)


பிரெஞ்சு (Français)
Vive le Jour ! Es-tu le soir qui venait précédemment? Non. Tu as été, au contraire, le temps final qui se nourrit de la vie de celle, qui a épousé son amoureux.

ஜெர்மன் (Deutsch)
Sei gesegnet, Abend! Bist du ein Abend? Nein – di bist ein Speer, der das Leben der Verheirateten tötet.

சுவீடிய (Svenska)
Ack du afton, du är ej lik andra kvällar! Ty du har blivit den stund som förgiftar gifta kvinnors liv.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Domina vesperae subirata dicit: Vespera non es, sed hasta, quae nuptarum consum.it vitam. Vale tempus vespertinum! (MCCXXI)

போலிய (Polski)
O półmroku! Nie jesteś podobny zaiste Do tych mroków, co miłe są żonom.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22