பசப்புறு பருவரல்

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.   (௲௱௮௰௬ - 1186) 

விளக்கின் முடிவை எதிர்பார்த்துத் தான் வரக் காத்திருக்கும் இருளைப் போல, என் தலைவனுடைய தழுவலின் முடிவைப் பசலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது  (௲௱௮௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் ‌சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது.  (௲௱௮௰௬)
— மு. வரதராசன்


விளக்கு மெலிவதைப் பார்த்து நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்த பசலை வரும்.  (௲௱௮௰௬)
— சாலமன் பாப்பையா


விளக்கின் ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது  (௲௱௮௰௬)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀺𑀴𑀓𑁆𑀓𑀶𑁆𑀶𑀫𑁆 𑀧𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀇𑀭𑀼𑀴𑁂𑀧𑁄𑀮𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀓𑀷𑁆
𑀫𑀼𑀬𑀓𑁆𑀓𑀶𑁆𑀶𑀫𑁆 𑀧𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀧𑀘𑀧𑁆𑀧𑀼 (𑁥𑁤𑁢𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Vilakkatram Paarkkum Irulepol Konkan
Muyakkatram Paarkkum Pasappu
— (Transliteration)


viḷakkaṟṟam pārkkum iruḷēpōl koṇkaṉ
muyakkaṟṟam pārkkum pacappu.
— (Transliteration)


Darkness lies in wait for the lamp to go out, And pallor for the embrace to break.

ஹிந்தி (हिन्दी)
दीपक बुझने की यथा, तम की जो है ताक ।
प्रिय-आलिंगन ढील पर, पैलापन की ताक ॥ (११८६)


தெலுங்கு (తెలుగు)
దీపకాంతి తగ్గఁ దిమిరమ్ము బైకొను
విధము పాలె మేను ప్రియుని బాయ. (౧౧౮౬)


மலையாளம் (മലയാളം)
ദീപദീപ്തിബലം നോക്കി തമസ്സേറുന്ന പോലവേ വിളർപ്പും കാമുകസ്പർശപ്രാപ്തിനോക്കിയിരിക്കയാം (൲൱൮൰൬)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಬೆಳಕಿನ ನಾಶವನ್ನೇ ಎದುರು ನೋಡುವ ಇರುಳಿನಂತೆ, ಇನಿಯನ ಅಪ್ಪುಗೆಯ ನಡಲಿಕೆಯನ್ನೇ ಎದುರು ನೋಡುತ್ತಿದೆ ವೈವರ್ಣ್ಯವು. (೧೧೮೬)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
यथा दीपतिरोधानं प्रतीक्षद्वर्तते तम: ।
तथाऽऽलिङ्गनविच्छेदं वैवर्ण्य सम्प्रतीक्षते ॥ (११८६)


சிங்களம் (සිංහල)
එළියෙ අවසානය - පැතුරුණු අඳුර වාගේ කෙළවර සසඟයෙහි - බලයි සුදු මැලි ගතිය සිරුරේ (𑇴𑇳𑇱𑇦)

சீனம் (汉语)
妾之憔悴伺妾於頁人分離之頃, 正如黑暗伺於日落之頃也. (一千一百八十六)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Saperti kegelapan yang menanti chahaya lampu di-padamkan, bagitu-lah juga kepuchatan menunggu perpisahan-ku dengan ke- kaseh sayang.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
빛이사라지는것을어둠이기다리는것처럼, 창백함은애인의포옹을기다린다. (千百八十六)

உருசிய (Русский)
Как темень ожидает ухода света, так и бледность и желтизна не дождутся, когда в последний раз перед разлукой обнимет меня любимый, чтобы наброситься на меня и обезобразить тело

அரபு (العَرَبِيَّة)
كما أن الظلام يتربصن باطفاء النور فكذلكإمتقاع لونى يتربض بفراقى عن الحبيب (١١٨٦)


பிரெஞ்சு (Français)
Telle l'obscurité qui guette la langueur de la lampe pour approcher, telle la pâleur a guetté la cessation de l'union, pour m'approcher.

ஜெர்மன் (Deutsch)
Gerade wie die Dunkelheit auf das Vergehen des Lichtes wartet - Fahlheit wartet auf den Abbruch der Umarmung meines Mannes.

சுவீடிய (Svenska)
Liksom mörkret vaktar på att lampan skall brinna ner så vaktade denna blekhet på att min älskades famntag skulle slappna.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Ut nox, quae finem lucis exspectat, ita pallor, qui finem ample- xus exspectat (MCLXXXVI)

போலிய (Polski)
Bladość jeno czekała, byś ty ruszył w drogę. Mrok zapada, gdy światła zbyt mało.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22