கண்விதுப்பழிதல்

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.   (௲௱௮௰ - 1180) 

எம்மைப் போல் அறைபறையாகிய கண்களை உடையவரின், நெஞ்சில் அடக்கியுள்ள மறையை அறிதல், இவ்வூரிலே உள்ளவர்க்கு மிகவும் எளியதாகும்  (௲௱௮௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.  (௲௱௮௰)
— மு. வரதராசன்


அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது.  (௲௱௮௰)
— சாலமன் பாப்பையா


காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது, யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல  (௲௱௮௰)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀶𑁃𑀧𑁂𑁆𑀶𑀮𑁆 𑀊𑀭𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀅𑀭𑀺𑀢𑀷𑁆𑀶𑀸𑀮𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑁄𑀮𑁆
𑀅𑀶𑁃𑀧𑀶𑁃 𑀓𑀡𑁆𑀡𑀸𑀭𑁆 𑀅𑀓𑀢𑁆𑀢𑀼 (𑁥𑁤𑁢)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Maraiperal Ooraarkku Aridhandraal Empol
Araiparai Kannaar Akaththu
— (Transliteration)


maṟaipeṟal ūrārkku aritaṉṟāl empōl
aṟaipaṟai kaṇṇār akattu.
— (Transliteration)


With eyes that drum up and declare my grief, It is hard to conceal secrets from these folks!

ஹிந்தி (हिन्दी)
मेरे सम जिनके नयन, पिटते ढोल समान ।
उससे पुरजन को नहीं, कठिन भेद का ज्ञान ॥ (११८०)


தெலுங்கு (తెలుగు)
ఊరివారికెల్ల నోరెత్తి చాటించు
దాపలేక కండ్లు తాప భరము. (౧౧౮౦)


மலையாளம் (മലയാളം)
പറപോൽ പ്രചുരം ചെയ്യും കൺകണ്ടാലെൻ മനസ്സിലെ രഹസ്യങ്ങൾ ജനങ്ങൾക്കങ്ങറിയാനെളുതായിടും (൲൱൮൰)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಧ್ವನಿಗೈವ ನಗಾರಿಯಂತೆ ಮನಸ್ಸಿನ ವೇದನೆಯನ್ನು ಸಾರುತ್ತಿರುವ ಕಣ್ಣುಗಳಿರುವಾಗ, ನಮ್ಮ ಪ್ರಣಯ ರಹಸ್ಯವನ್ನು ಊರವರಿಗೆ ಅರಿತುಕೊಳ್ಳುವುದು ಕಷ್ಟವೇನಲ್ಲ! (೧೧೮೦)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
गुह्यप्रकाशपटहतुल्यनेत्रयुता वयम् ।
अतोऽस्मन्नयने दृष्ट्‍वा रहस्यं जना: ॥ (११८०)


சிங்களம் (සිංහල)
මා වැනි ගහන බෙර - දෙනුවන් ඇත්තවුන්ගේ රහස දැන ගැනුමට - පහසුවෙන් ගැමි දනට නිතැතින් (𑇴𑇳𑇱)

சீனம் (汉语)
妾之雙目, 如講史之鼓, 陳露一切於外; 鄕人不難知妾之隱祕也. (一千一百八十)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Bila mata orang sendiri menjadi penyibar rahsia, saperti mata-ku ini, tidak sukar-lah bagi orang asing menyelok rahsia yang chuba di- sembunyi-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
눈이고통을드러내기때문에, 마을사람들에게그녀의비밀을감출수없다. (千百八十)

உருசிய (Русский)
Жителям селения нетрудно разгадать тайну моих глаз. Ведь в них отражена любовь

அரபு (العَرَبِيَّة)
عينا الأحبة بنفسهما تعلنان أسرارهما بضرب الطبول على ملأ من الناس كمثل ما تفعل عيناي فلذلك لا يصعب على الأجانب أن يعرفوا عن السر الذى هو كامن فى قلب الحبيب أو لحبيبة (١١٨٠)


பிரெஞ்சு (Français)
Il n'est pas difficile aux gêna de cette ville, de découvrir le secret enterré dans le cœur de celles, qui comme moi. ont des yeux, qui sont un tambour qui ne résonne pas.

ஜெர்மன் (Deutsch)
Es ist nicht schwer für die Leute des Ortes, hinter meine Geheimnisse zu kommen, da meine Augen einer geschlagenen Trommel gleichen.

சுவீடிய (Svenska)
För folket i byn är det ingen konst att känna mitt hjärtas hemlighet. Mina ögon ger den tillkänna lika ljudligt som trumvirvlar.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Sociae dicenti: ne incusetur, crudelitatem ejus celare de bes domina responder: Quae, ut ego, oculos habent pulsatis tympanis similes, ex eorum animis secretum elicere non erit difficile. (MCLXXX)

போலிய (Polski)
Ludzie wiedzą, że jestem śmiertelnie stroskana, Bo im to wyznajecie bez pytań.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22