நாணுத் துறவுரைத்தல்

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.   (௲௱௪௰ - 1140) 

யாம் பட்ட இந்தப் பிரிவுத் துன்பத்தை அவர்களும் அடையாததாலேதான், அறிவில்லாதவர், யாம் கண்ணாற் காணும்படியாக எம் எதிரே நின்று சிரிக்கின்றனர்  (௲௱௪௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.  (௲௱௪௰)
— மு. வரதராசன்


நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!  (௲௱௪௰)
— சாலமன் பாப்பையா


காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்  (௲௱௪௰)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀬𑀸𑀫𑁆𑀓𑀡𑁆𑀡𑀺𑀷𑁆 𑀓𑀸𑀡 𑀦𑀓𑀼𑀧 𑀅𑀶𑀺𑀯𑀺𑀮𑁆𑀮𑀸𑀭𑁆
𑀬𑀸𑀫𑁆𑀧𑀝𑁆𑀝 𑀢𑀸𑀫𑁆𑀧𑀝𑀸 𑀆𑀶𑀼 (𑁥𑁤𑁞)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Yaamkannin Kaana Nakupa Arivillaar
Yaampatta Thaampataa Aaru
— (Transliteration)


yāmkaṇṇiṉ kāṇa nakupa aṟivillār
yāmpaṭṭa tāmpaṭā āṟu.
— (Transliteration)


Fools laugh so as to be seen by us, Not having endured what we have.

ஹிந்தி (हिन्दी)
रहे भुक्त-भोगी नहीं, यथा चुकी हूँ भोग ।
हँसते मेरे देखते, बुद्धि हीन जो लोग ॥ (११४०)


தெலுங்கு (తెలుగు)
ఏనుబడినపాటు లితరులు పడియున్న
నవ్వ రిటుల వారు నన్ను జూచి. (౧౧౪౦)


மலையாளம் (മലയാളം)
നമ്മെ നോക്കിച്ചിരിക്കുന്നു കാണുമാർ പുരവാസികൾ; പ്രണയത്താൽ നമുക്കുള്ള യാതനയറിയാത്തവർ (൲൱൪൰)

கன்னடம் (ಕನ್ನಡ)
ನಾನು ಅನುಭವಿಸುತ್ತಿರುವ ವಿರಹವೇದನೆಯನ್ನು ತಾವು ಕಂಡರಿಯದಿರುವುದರಿಂದಲೇ, ನನ್ನ ಕಣ್ಣೆದುರೇ ಕೆಲವರು ನನ್ನನ್ನು ಕಂಡು ನಗುತ್ತಿದ್ದಾರೆ! ಮೂರ್ಖರು! (೧೧೪೦)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
अस्मस्समसखीभिस्तु न प्राप्तं व्यसनं पुरा' ।
… (११४०)


சிங்களம் (සිංහල)
මා ලත් දුක ඔවුන් - නොවටහා ගත් බැවිනුයි මා දෙස බල බලා - සිනාසෙති ඒ බව නො දන්නෝ (𑇴𑇳𑇭)

சீனம் (汉语)
愚蠢之人竟當面向妾嘲笑, 以其未歷情愛之苦惱也. (一千一百四十)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Orang2 dungu mentertawa keji di-muka-ku sendiri: mereka sa- benar-nya tidak merasa segala duka yang telah ku-rasai.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
무지한자는그녀처럼사랑의고통을겪어본적이없기때문에, 그녀가나타나면조롱한다. (千百四十)

உருசிய (Русский)
Пусть недалекие люди смеются надо мною.* Я знаю: они не испытали тех мук любви, которые выпали на мою долю

அரபு (العَرَبِيَّة)
الحمقاء يضحكون على أمام وجهي بسبب أنهم لا يعرفون عنالألام التى أشعرها وأتحملها فى سبيل المحبة (١١٤٠)


பிரெஞ்சு (Français)
Les imbéciles se rient de moi. de manière non seulement à être entendus mais aussi à être vus de moi, parce qu'ils n'ont pas souffert de la maladie dont je souffre.

ஜெர்மன் (Deutsch)
Die Toren lachen mich vor meinen Augen aus – sie haben nicht erlitten, was ich erlitten habe.

சுவீடிய (Svenska)
Dumma människor skrattar åt mig i min åsyn. Ty de har ej plågats som jag.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Socia, dominae succensens, quod illius statum tristem [derisit, secum <licit: Ut oculis meis videam, me derident inscii - quia, quod ego patior, illi non patiuntur (MCXL)

போலிய (Polski)
Gdy zrozumie - powita rechotem plugawym, Jeśli obca mu wzniosłość kochania.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா ஆறு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22