புணர்ச்சி மகிழ்தல்

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.   (௲௱௭ - 1107) 

தம் வீட்டிலிருந்து, தமக்குள்ள பகுதியை உண்ணும் இனிமை போன்றது, அழகிய மாமை நிறம் உடையவளான இவளைத் தழுவிப் பெறுகின்ற இன்பம்!  (௲௱௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுந்து கொடுத்து உண்டாற் போன்றது.  (௲௱௭)
— மு. வரதராசன்


அழகிய மா நிறப் பெண்ணாகிய என் மனைவியிடம் கூடிப் பெறும் சுகம், தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் சுகம் போன்றது.  (௲௱௭)
— சாலமன் பாப்பையா


தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது  (௲௱௭)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀫𑁆𑀫𑀺𑀮𑁆 𑀇𑀭𑀼𑀦𑁆𑀢𑀼 𑀢𑀫𑀢𑀼𑀧𑀸𑀢𑁆𑀢𑀼 𑀉𑀡𑁆𑀝𑀶𑁆𑀶𑀸𑀮𑁆
𑀅𑀫𑁆𑀫𑀸 𑀅𑀭𑀺𑀯𑁃 𑀫𑀼𑀬𑀓𑁆𑀓𑀼 (𑁥𑁤𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Thammil Irundhu Thamadhupaaththu Untatraal
Ammaa Arivai Muyakku
— (Transliteration)


tam'mil iruntu tamatupāttu uṇṭaṟṟāl
am'mā arivai muyakku.
— (Transliteration)


Like sharing one’s food at one’s own home Is the embrace of this fair maid.

ஹிந்தி (हिन्दी)
स्वगृह में स्वपादर्थ का, यथा बाँट कर भोग ।
रहा गेहुँए रंग की, बाला से संयोग ॥ (११०७)


தெலுங்கு (తెలుగు)
అతివ కొగలింపు లాకలిదప్పుల
మాన్ప గలుగునట్టి మహిమగలది. (౧౧౦౭)


மலையாளம் (മലയാളം)
കാന്തിമത്വമിയന്നുള്ളോരഴകിയിന്നാലിംഗനം സ്വന്തം പൊരുൾ പലരുമായ് ചേർന്നശിപ്പതു പോലെയാം (൲൱൭)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಅಂದವಾದ ಹೇಮ ವರ್ಣದ ಈ ಬೆಡಗಿಯ ಅಪ್ಪುಗೆಯ ಸುಖವು ತಮ್ಮದೇ ಆದ ಮನೆಯಲ್ಲಿ ಇದ್ದು ಇತರರೊಡನೆ ತಾವು ಸಂಪಾದಿಸಿದ ವಸ್ತುಗಳನ್ನು ಹಂಚಿ ಕೊಂಡು ಅನುಭವಿಸಿದ ಆನಂದವನ್ನು ಹೋಲುವುದು. (೧೧೦೭)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
स्वगेहे स्वार्जितं चान्यै: विभज्याशनकर्मवत् ।
रम्यवर्णाङ्गनाकायपरिष्वङ्ग: सुखावह: ॥ (११०७)


சிங்களம் (සිංහල)
රූමතියත් සමග - රමණය කරන හැම විට තම ගෙයි සිට තමා - බෙදාගෙන කෑමක් සමානයි (𑇴𑇳𑇧)

சீனம் (汉语)
彼淑女之愛撫, 予人無上之樂, 有如東道主克盡東道後之喜悅也. (一千一百七)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Pelokan gadis jelita ini ada-lah sa-penoh2 ni‘mat, malah dapat di- bandingkan dengan ni‘mat kehidupan tuan rumah yang memakan hanya sa-lepas memberi sedekah kapada peminta2.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
아름다운처녀를껴안는것은집에서손님과함께나누는음식만큼이나정말기분좋은일이다. (千百七)

உருசிய (Русский)
Обнимать любимую мне также сладостно,,ак угощать лучшими купаниями гостей

அரபு (العَرَبِيَّة)
غناق هذه الحسناء المحبوبة يثير البهجة والروباقص حدهما كما يجد رب البيت ذلك السرور فى نفسه عند ما يأكل نصببه من الطعام بعد ما يوزعه بين الناس (١١٠٧)


பிரெஞ்சு (Français)
L'union de cette fille jolie produit la même volupté que celle éprouvée par le père de famille qui, après avoir servi aux hôtes dans sa maison, tout ce qui avait été acquis par ses efforts, se nourrit de sa part.

ஜெர்மன் (Deutsch)
Das freudige Glück, das hübsche schöne Mädchen zu umarmen, gleicht der Freude, im eigenen Haus zusammen zu wohnen und das Essen mit anderen zu teilen.

சுவீடிய (Svenska)
Att famna denna skönt blekhyade kvinna är lika ljuvligt som att leva i familjens sköte och att äta sedan man har delat sina håvor med de behövande.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Socia domino dixerat: ,,comrnuni virtuti dornesticae te aci::prnrno-dantem , qua in sua quisque dorno suo sorte fructur, illarn publice domum ducere te oportet." Dominus (abnuens) responclet: Puellam aureo colore amplecti aeque est (duke) atque in domo sua distribuentem suis frui. (MCVII)

போலிய (Polski)
Bo pieszczoty jej dają mi szczęścia tak wiele, Jakbym był najbogatszy na ziemi,
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22