மானம்

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.   (௯௱௬௰௧ - 961) 

மிகவும் இன்றியமையாத சிறப்புக்களை உடையவாயினும், உயர்குடியில் பிறந்தவர், தாழ்ச்சி வரும்படியான செயல்களைச் செய்யாமல் விட வேண்டும்  (௯௱௬௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.  (௯௱௬௰௧)
— மு. வரதராசன்


ஒன்று இல்லாமல் எதுவும் நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால் குடும்பத்திற்கு இழிவு வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே.  (௯௱௬௰௧)
— சாலமன் பாப்பையா


கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்  (௯௱௬௰௧)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀷𑁆𑀶𑀺 𑀅𑀫𑁃𑀬𑀸𑀘𑁆 𑀘𑀺𑀶𑀧𑁆𑀧𑀺𑀷 𑀆𑀬𑀺𑀷𑀼𑀫𑁆
𑀓𑀼𑀷𑁆𑀶 𑀯𑀭𑀼𑀧 𑀯𑀺𑀝𑀮𑁆 (𑁚𑁤𑁠𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Indri Amaiyaach Chirappina Aayinum
Kundra Varupa Vital
— (Transliteration)


iṉṟi amaiyāc ciṟappiṉa āyiṉum
kuṉṟa varupa viṭal.
— (Transliteration)


Reject base actions even if such rejection Makes life impossible.

ஹிந்தி (हिन्दी)
जीवित रहने के लिये, यद्यपि है अनिवार्य ।
फिर भी जो कुल-हानिकर, तज देना वे कार्य ॥ (९६१)


தெலுங்கு (తెలుగు)
ఎంత గొప్పదైన నింటికిఁ దగకున్న
దానిఁ మానుకొనుటె మానమగును. (౯౬౧)


மலையாளம் (മലയാളം)
ശ്രേഷ്ഠമാം കാര്യമായാലും അപരിഹാര്യമായാലും കുലമേന്മക്ക് ചേരാത്ത കർമ്മങ്ങളൊഴിവാക്കണം (൯൱൬൰൧)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಪ್ರಾಣವೆ ಕೋಗುವಂಥ ಅನಿವಾರ್ಯವಾದ ಕಾರಣಗಳಿದ್ದರೂ ಕುಲ ಗೌರವವನ್ನು ಕೀಳುಮಾಡುವಂಥ ಕಾರ್ಯಗಳನ್ನು ಕೈಬಿಡಬೇಕು. (೯೬೧)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
केनचिद्रचितं कार्यं भवेदपि महत्तरम् ।
कुलगौरवनाशाय यदि तत् स्याद्विसृज्यताम् ॥ (९६१)


சிங்களம் (සිංහල)
අති උසස් උත්තම - ගරු සරු ලබනු සඳහා තම පවුල කෙලෙසන - පහත් කිරියක් නො කළ යුතූ වේ (𑇩𑇳𑇯𑇡)

சீனம் (汉语)
莫行低賤之事, 雖有名利可圖亦不爲也. (九百六十一)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Tahan-lah diri-mu daripada segala benda yang akan merendahkan kamu, walau pun benda2 itu penting sa-kali untok memelihara nyawa-mu sendiri.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
불가피한경우라도, 가족의명예를실추시키는비열한행위는하지않아야한다. (九百六十一)

உருசிய (Русский)
Отбрось мысль о поступках, приносящих ущерб твоему достоинству,,аже если отказ от них угрожает твоей жизни

அரபு (العَرَبِيَّة)
إحذر عن الأشياء التى توقعك فى قعر المذلة ولو أذطرت بالعمل عليها لبقاء حياتك (٩٦١)


பிரெஞ்சு (Français)
S'abstenir des actes qui dégradent l'honneur de sa famille, si même ils doivent procurer une gloire rare à obtenir.

ஜெர்மன் (Deutsch)
Mögen sie auch unentbehrlich erscheinen – keiner soll erniedrigende Handlungen begehen.

சுவீடிய (Svenska)
Även om det ter sig oumbärligt gott bör du undfly det som förminskar <din heder>.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Etiamsi gloriam tibi afferant, quam aliter obtinere nequeas, ea, quae dignitatem tuam imminuant, dimittas. (CMLXI)

போலிய (Polski)
Skrupulatnie unikaj uczynków nieprawych, Choćby one wspierały twe cele.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22