கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.   (௯௱௩௰ - 930) 

கள்ளுண்பவன், தானுண்ணாதபோது, உண்டு களித்த பிறனைக் காண்பான் அல்லவோ! அப்படிக் காணும் போது, தன் நிலையும் இப்படித்தான் என்று நினைக்க மாட்டானோ?  (௯௱௩௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ.  (௯௱௩௰)
— மு. வரதராசன்


போதைப் பொருளை ஒருவன் பயன்படுத்தாத போது, அதைப் பயன்படுத்தி இருப்பவனைப் பார்த்துத் தான் பயன்படுத்தும்போது தனக்கும் இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ?  (௯௱௩௰)
— சாலமன் பாப்பையா


ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?  (௯௱௩௰)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀴𑁆𑀴𑀼𑀡𑁆𑀡𑀸𑀧𑁆 𑀧𑁄𑀵𑁆𑀢𑀺𑀶𑁆 𑀓𑀴𑀺𑀢𑁆𑀢𑀸𑀷𑁃𑀓𑁆 𑀓𑀸𑀡𑀼𑀗𑁆𑀓𑀸𑀮𑁆
𑀉𑀴𑁆𑀴𑀸𑀷𑁆𑀓𑁄𑁆𑀮𑁆 𑀉𑀡𑁆𑀝𑀢𑀷𑁆 𑀘𑁄𑀭𑁆𑀯𑀼 (𑁚𑁤𑁝)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Kallunnaap Pozhdhir Kaliththaanaik Kaanungaal
Ullaankol Untadhan Sorvu
— (Transliteration)


kaḷḷuṇṇāp pōḻtiṟ kaḷittāṉaik kāṇuṅkāl
uḷḷāṉkol uṇṭataṉ cōrvu.
— (Transliteration)


When a drunkard sober sees another drunk, Why does he not note his own damage?

ஹிந்தி (हिन्दी)
बिना पिये रहते समय, मद-मस्त को निहार ।
सुस्ती का, पीते स्वयं, करता क्यों न विचार ॥ (९३०)


தெலுங்கு (తెలుగు)
బోదలేనివేళ బోదలో బడియున్న
వానిఁజూడ బుద్ధి వచ్చునేమొ. (౯౩౦)


மலையாளம் (മലയാളം)
മദ്യലഹരിയിൽ കാട്ടിക്കൂട്ടും ഹീനതയൊക്കെയും ബോധവേളയിൽ പാനശീലർ ശ്രദ്ധിപ്പതില്ലയോ (൯൱൩൰)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಒಬ್ಬನು ತಾನು ಕಳ್ಳು ಕುಡಿಯದಿರುವಾಗ, ಕಳ್ಳಿನ ಅಮಲಿನಲ್ಲಿ ಇರುವವನನ್ನು ಕಂಡಾದ ಕಳ್ಳು ಕುಡಿಯುವುದರಿಂದ ಆಗುವ ಕೆಡುಕನ್ನು ಯೋಚಿಸಲಾರನೆ? (೯೩೦)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
अपीतमदिर: कश्चिद् दृष्ट्वा पानमदान्वितम् ।
इयं दशा ममापि स्यात् पानेन' ति किं स्मरेत् ॥ (९३०)


சிங்களம் (සිංහල)
මත්වූවකූ බලා - සිහි ඇති අතර සිතූවොත් බිමෙහි ඇති වරද - නො පෙනේද රා බොන දනන්හට (𑇩𑇳𑇬)

சீனம் (汉语)
酒徒淸醒之頃, 視他人之醉態, 可以自省否? (九百三十)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Orang yang tenang bila melihat keadaan mabok orang lain, tidak dapat-kah ia menggambarkan keadaan diri-nya sendiri bila dalam kemabokan?
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
술고래가술에취하지않았을때, 술에취한또다른자를보는경우, 자신의음주에대한악영향을인식한다. (九百三十)

உருசிய (Русский)
Неужели о глупости пьянства не думает трезвый,,огда видит человека, обезумевшего от пития

அரபு (العَرَبِيَّة)
الرجل الرزين الذى يري غيره فى حالة السكر يمكن لــه أن يقدر حالته بصحة وجزم عند ما هو بنفسه سكران (٩٣٠)


பிரெஞ்சு (Français)
L'ivrogne qui rencontre un homme ivre, lors qu'il n'a pas bu lui-même, ne se rend pas compte de l'état pitoyable où lui-même s'est trouvé, lorsqu'il avait bu.

ஜெர்மன் (Deutsch)
lst einer nicht betrunken und sieht einen Trinker –denkt er nicht an die üblen Wirkungen seines tigenen Trinkens?

சுவீடிய (Svenska)
När någon i nyktert tillstånd ser en berusad man, inser han månne icke då sitt eget förfall <när han själv var drucken>?
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Qui ipse non potus bene potum adspiciat , nonnc vilitatem pota-tionis suae perspiciet? (CMXXX)

போலிய (Polski)
Niechaj w chwili trzeźwości innego zobaczy. Będzie to lekcja dlań... poglądowa.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22