கள்ளுண்ணாமை

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.   (௯௱௨௰௮ - 928) 

கள்ளை உண்டபொழுதே, முன் ஒளித்த குற்றம் மிகுதியாக வெளிப்படுமாதலால், மறைவாகக் கள்ளை உண்டு, ‘யான் உண்டு அறியேன்’ என்று பொய் கூறுவதைக் கைவிடுக  (௯௱௨௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.  (௯௱௨௰௮)
— மு. வரதராசன்


போதைப் பொருளைப் பயன்படுத்தி அறியேன் என்று பிறர்முன் சொல்வதை விட்டுவிடுக. ஏனெனில் மனத்துக்குள் மறைத்தது, நிதானம் தவறும்போது பெரிதாக வெளிப்பட்டு விடும்.  (௯௱௨௰௮)
— சாலமன் பாப்பையா


மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்  (௯௱௨௰௮)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀴𑀺𑀢𑁆𑀢𑀶𑀺𑀬𑁂𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀧𑀢𑀼 𑀓𑁃𑀯𑀺𑀝𑀼𑀓 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀢𑁆𑀢𑀼
𑀑𑁆𑀴𑀺𑀢𑁆𑀢𑀢𑀽𑀉𑀫𑁆 𑀆𑀗𑁆𑀓𑁂 𑀫𑀺𑀓𑀼𑀫𑁆 (𑁚𑁤𑁜𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Kaliththariyen Enpadhu Kaivituka Nenjaththu
Oliththadhooum Aange Mikum
— (Transliteration)


kaḷittaṟiyēṉ eṉpatu kaiviṭuka neñcattu
oḷittatū'um āṅkē mikum.
— (Transliteration)


Drop saying, 'I never drank': Hidden secrets will be out when drunk.

ஹிந்தி (हिन्दी)
‘मधु पीना जाना नहीं’, तज देना यह घोष ।
पीने पर झट हो प्रकट, मन में गोपित दोष ॥ (९२८)


தெலுங்கு (తెలుగు)
త్రాగుబోతువాఁడు త్రాగలే డనలేడు
తప్పు దాచ వాని తరముగాదు. (౯౨౮)


மலையாளம் (മലയാളം)
കുടിയില്ലാത്തവൻ ഞാനെന്നുരപ്പോരത് നിർത്തണം; വെള്ളമുള്ളിൽ കടന്നുള്ളിലുള്ളതെല്ലാം പുറത്തിടും (൯൱൨൰൮)

கன்னடம் (ಕನ್ನಡ)
ನಾನು ಕಳ್ಳು ಕುಡಿದರಿಯೆನು' ಎಂದು ಕಳ್ಳು ಕುಡಿಯುವವನು ಹೇಳುವುದನ್ನು ಕೈಬಿಡಬೇಕು; ಅವನು ಕಳ್ಳು ಕುಡಿದಾಗಲೇ ಅವನ ಮನಸ್ಸಿನೊಳಗಿನ ದೌರ್ಬಲ್ಯವೆಲ್ಲ ಹೊರಗೆ ಬರುವುದು. (೯೨೮)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
सुरां पीत्वापि 'नो पीतं मये ति कथनं त्यज ।
पानमात्रेण चित्तस्थसत्यं किल विनिस्सरेत् ॥ (९२८)


சிங்களம் (සිංහල)
රා බී මත්වීම - නො දනිමි කීම අත්හරු සිතෙහි සැඟවුනු දැය - මුවෙන් පිටවෙත් නො දැනුවත්වම (𑇩𑇳𑇫𑇨)

சீனம் (汉语)
酒徒佯作不知酒味者, 其詐僞更增其罪. (九百二十八)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Usah-lah si-pemabok berpura2 berkata, aku tidak tahu sa-benar-nya bagaimana rasa-nya mabok itu; kerana dengan bagitu dia akan hanya menambahkan lagi kepalsuan kapada ma‘siat-nya yang lain.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
술고래가술에취하지않는척해서는안된다.술에취해있을때비밀이누설되리라. (九百二十八)

உருசிய (Русский)
Пусть пьяница не пытается убедить, что он не пьет, ибо его порок виден невооруженным глазом

அரபு (العَرَبِيَّة)
لا يتظاهر احد بهدم شرب الخمر ويقول " انا لا أعرف ماذا اشرب" فانه يضم الزو والكذب إلى سيئاته العديدة (٩٢٨)


பிரெஞ்சு (Français)
Que ceux qui ont bu ne se donnent pas pour sobres, car la faute cachée apparaît avec évidence.

ஜெர்மன் (Deutsch)
Keiner soll vorgeben, nie getrunken zu haben - trinkt er, kommt augenblicklich das heraus, was in seinem Denken verborgen ist.

சுவீடிய (Svenska)
Må drinkaren aldrig bedyra: ”Jag har aldrig druckit!” Det han försöker dölja blir då desto mera uppenbart.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
,,Crapulam nescio", noli dicere: etiam quod in peetore abscon-ditum est (vitium), repente effundetur. (CMXXVIII)

போலிய (Polski)
Jeśli twierdzi, że nie pił, to jakże zaprzeczy Temu, co w zamroczeniu wygadał?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22