உட்பகை

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.   (௮௱௯௰ - 890) 

மனம் பொருந்தாதவரோடு கூடியிருந்து வாழும் வாழ்க்கை ஒரு குடிசையுள்ளே பாம்போடு கூடத் தங்கியிருந்து வருந்துவதைப் போன்றதாகும்  (௮௱௯௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.  (௮௱௯௰)
— மு. வரதராசன்


மனப்பொருத்தம் இல்லா‌தவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும்.  (௮௱௯௰)
— சாலமன் பாப்பையா


உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்  (௮௱௯௰)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀝𑀫𑁆𑀧𑀸𑀝𑀼 𑀇𑀮𑀸𑀢𑀯𑀭𑁆 𑀯𑀸𑀵𑁆𑀓𑁆𑀓𑁃 𑀓𑀼𑀝𑀗𑁆𑀓𑀭𑀼𑀴𑁆
𑀧𑀸𑀫𑁆𑀧𑁄𑀝𑀼 𑀉𑀝𑀷𑀼𑀶𑁃𑀦𑁆 𑀢𑀶𑁆𑀶𑀼 (𑁙𑁤𑁣)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Utampaatu Ilaadhavar Vaazhkkai Kutangarul
Paampotu Utanurain Thatru
— (Transliteration)


uṭampāṭu ilātavar vāḻkkai kuṭaṅkaruḷ
pāmpōṭu uṭaṉuṟain taṟṟu.
— (Transliteration)


To partner one with a hidden hate Is to share a hut with a cobra.

ஹிந்தி (हिन्दी)
जिनसे मन मिलता नहीं, जीवन उनके संग ।
एक झोंपड़ी में यथा, रहना सहित भुजंग ॥ (८९०)


தெலுங்கு (తెలుగు)
సర్పమున్న యింటఁ సంసారమున్నట్లు
సమరసమ్ము లేక సాగు బ్రతుకు. (౮౯౦)


மலையாளம் (മലയാളം)
മനപ്പൊരുത്തമില്ലാത്തോരൊന്നിച്ചുള്ളൊരു ജീവിതം വിഷം ചീറ്റുന്ന മൂർക്കനൊത്തൊരു കൂട്ടിൽ വസിപ്പതാം (൮൱൯൰)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ಒಡುಂಬಡಿಕೆ ಇಲ್ಲದವರ ಸಹಬಾಳ್ವೆಯು, ಒಂದೇ ಗುಡಿಸಿಲೊಳಗೆ ಹಾವಿನೊಂದಿಗೆ ಕೂಡಿ ಬಾಳಿದಂತೆ. (೮೯೦)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
लोके भिन्नमनस्तत्त्वैर्मानवैस्सह जीवनम् ।
एकत्रैव गृहे सर्पै: सहवाससमं भवेत् ॥ (८९०)


சிங்களம் (සිංහල)
එකමුතූ නැතියවුන් - සමග කරනා වාසය විසුමක් මෙනි පැලක - නපුරු විසකූරු සපුන් සමඟින් (𑇨𑇳𑇲)

சீனம் (汉语)
人與潛懷仇恨之徒爲友, 如頭盔内藏有毒蛇也. (八百九十)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Amati-lah dia yang bergaul mesra dengan orang yang menyimpan benchi di-dalam hati: dia hidup sa-rumah dengan ular sendok sa- bagai rakan-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
가정생활에의견불화가있는경우,오두막에서뱀과함께살아가는인생과같다. (八百九十)

உருசிய (Русский)
Проживание с человеком, враждебно настроенным к тебе, подобно нахождению в хижине кобры

அரபு (العَرَبِيَّة)
الرجل الذى يختلط إختلاطا تاما مع احد يبغضه ويكرهه فى قلبه فمثله كمثل من يعيش فى زاوية من الكوخ فى رفاقة الصل (٨٩٠)


பிரெஞ்சு (Français)
La vie que l'on mène avec des personnes qui ne sont pas unies par le cœur, ressemble à celle que l'on mène, dans une chaumière habitée par un serpent.

ஜெர்மன் (Deutsch)
Ein Leben mit Unverträglichen gleicht dem Leben in einer Hütte mit einer Kobra.

சுவீடிய (Svenska)
Att leva tillsammans i osämja är som att dela bostad med en kobra.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Cum iis vivere, qui interno am ore careant, idem est atque in humili casa simul cum serpente habitare. (DCCCXC)

போலிய (Polski)
Przebywanie z wrogami, co niby się garną, To jak gdybyś zamieszkał ze żmiją.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உட்பகையோடு வாழ முடியுமா போட்டோ? — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

பாம்பாட்டிக்குத் தொழில், பாம்பைப் பிடித்து, மகுடி வாசித்து, அதை ஆடவைத்து, மக்களிடம் காசு வாங்கி, வயிறு வளர்ப்பது. வேறு வழி இல்லாமல் பாம்போடு தான் அவன் கட்டுப்பட்டு இருக்கிறான். ஆனால், பயத்தோடு, ஆபத்துக்கும் உட்பட்டு வசிக்கிறான்.

அதுபோல, உள் பகை கொண்டிருக்கும் சுற்றத்தாரோடு வாழ்பவன் கட்டுப்பட்டு வேறு வழி இல்லாமல் அந்த குடும்பத்தில் வாழ்கிறான். ஆனால், சுற்றத்தாரின் உள்பகை எப்பொழுதும் கெடுதியை கொடுக்க கூடியது என்பதை உணர வேண்டும்.

(மனப் பொருத்தம் இல்லாத கணவன்- மனைவிக்கும் இது பொருந்தும்)


உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22