அரத்தைக் கொண்டு அராவப்பட்ட இரும்பானது தேய்கிறது; துண்டிக்கப்படுகிறது.
அரமும் இரும்பு; துண்டிக்கபடுவதும் இரும்பு தான். எனினும் பல மடங்கு வலிமை உடைய பெரிய இரும்பைச் சிறிய இரும்பான அரம் அராவி அராவி அறித்துவிடுகிறது.
அதுபோல, ஒற்றுமையோடு வாழும் பெரிய குடும்பத்தில் சிறிது உட்பகை தோன்றுமானால் அது பெரிதாக வளர்ந்து அந்த குடும்பத்தின் ஒற்றுமையை குலைத்து, அழித்துவிடும்.
(உட்பகை காரணமாக வரலாறு வரலாறு, சகோதர- சகோதரிகள், கணவன்- மனைவி, உறவினர், பெற்றோர், பிள்ளைகள் முதலானோர் சச்சரவிட்டு, நீதிமன்றங்கள் சென்று அழிந்தவர் பலர்)