பேதைமை

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.   (௮௱௩௰௨ - 832) 

பேதைமை என்பவற்றுள் எல்லாம் பெரிய பேதைமையாவது, விரும்பத்தகாத ஒரு செயலைச் செய்யத் தொடங்கி, அதையும் பொருத்தமற்ற வகையில் செய்தல் ஆகும்  (௮௱௩௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.  (௮௱௩௰௨)
— மு. வரதராசன்


அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும்.  (௮௱௩௰௨)
— சாலமன் பாப்பையா


தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது, என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்  (௮௱௩௰௨)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑁂𑀢𑁃𑀫𑁃𑀬𑀼𑀴𑁆 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀧𑁂𑀢𑁃𑀫𑁃 𑀓𑀸𑀢𑀷𑁆𑀫𑁃
𑀓𑁃𑀬𑀮𑁆𑀮 𑀢𑀷𑁆𑀓𑀝𑁆 𑀘𑁂𑁆𑀬𑀮𑁆 (𑁙𑁤𑁝𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Pedhaimaiyul Ellaam Pedhaimai Kaadhanmai
Kaiyalla Thankat Seyal
— (Transliteration)


pētaimaiyuḷ ellām pētaimai kātaṉmai
kaiyalla taṉkaṭ ceyal.
— (Transliteration)


Folly among follies is the fondness for doing things Beyond one's reach.

ஹிந்தி (हिन्दी)
परम मूढ़ता मूढ़ में, जानो उसे प्रसिद्ध ।
उन सब में आसक्ति हो, जो हैं कर्म निषिद्ध ॥ (८३२)


தெலுங்கு (తెలుగు)
హీనమందు గొప్ప హీనమ్ము సర్వదా
చెడు ప్రవర్తనమ్ము విడువకుంట. (౮౩౨)


மலையாளம் (മലയാളം)
പെരുതായുള്ള വിഡ്ഢിത്തമേതാണെന്ന് നിനക്കുകിൽ തന്നാലാകാത്ത കാര്യത്തിൽ താൽപ്പര്യം വെച്ചു നീങ്ങലാം (൮൱൩൰൨)

கன்னடம் (ಕನ್ನಡ)
ತನ್ನ ನಡತಗೆ ಒಗ್ಗದ ಕೆಲಸಗಳನ್ನು ಬಯಸಿ ಕೈಗೊಳ್ಳುವುದು ದಡ್ಡತನದ ಪರಮಾವಧಿಯೆನಿಸುವುದು. (೮೩೨)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
नानाविधेषु मौढ्येषु मौढ्यं तच्छिखरायते ।
यच्छास्त्रनिन्दिते हेये दुराचारे तु भोग्यधी: ॥ (८३२)


சிங்களம் (සිංහල)
හැම දදකම් වලින් - තද දද කමක් වන්නේ තම අතට නො ලදැකි - දෙයට ආශාවෙන් වෙලීමයි (𑇨𑇳𑇬𑇢)

சீனம் (汉语)
愚之最甚者, 專心爲惡者也. (八百三十二)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Raja segala kebodohan ia-lah merelakan diri kapada benda2 yang hina dan keji.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
어리석은자들중의어리석은자는지위에대해적합하지않은행위를하려는열망이있다. (八百三十二)

உருசிய (Русский)
Самая большая глупость — это желать себе глупых поступков

அரபு (العَرَبِيَّة)
أكبر حماتة من بين الحماقات العديدة هي ميلان قلبك إلا أشياء خسيسة دنيئة (٨٣٢)


பிரெஞ்சு (Français)
L'ignorance de toutes les ignorances, c'est désirer faire les actes interdits.

ஜெர்மன் (Deutsch)
Die größte Torheit ist, sich am Tun des Verbotenen zu erfreuen.

சுவீடிய (Svenska)
Dåraktigast av all dårskap är att eftertrakta det som ej går an.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Stultitia est omni stultitia major vita flagitiosa voluptatem sectari. (DCCCXXXII)

போலிய (Polski)
Lecz koroną ślepoty jest właśnie pragnienie Robić zło, bo to niby popłaca.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22