கூடா நட்பு

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.   (௮௱௨௰௩ - 823) 

பலவான நல்ல அறநூல்களை எல்லாம் கற்றிருந்தாலும், தம் மனத்திலே நல்ல பண்பினர் ஆகுதல் என்பது, பெருந்தன்மைப் பண்பு இல்லாதவருக்கு அரிய செயலாகும்  (௮௱௨௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.  (௮௱௨௰௩)
— மு. வரதராசன்


மனத்தால் பொருந்தாதவர்கள் நல்ல பல நூல்களைக் கற்றபோதும் மனந்திருந்தி நல்ல நண்பர் ஆவது அரிது.  (௮௱௨௰௩)
— சாலமன் பாப்பையா


அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்  (௮௱௨௰௩)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀮𑀦𑀮𑁆𑀮 𑀓𑀶𑁆𑀶𑀓𑁆 𑀓𑀝𑁃𑀢𑁆𑀢𑀼 𑀫𑀷𑀦𑀮𑁆𑀮𑀭𑁆
𑀆𑀓𑀼𑀢𑀮𑁆 𑀫𑀸𑀡𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀭𑀺𑀢𑀼 (𑁙𑁤𑁜𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Palanalla Katrak Kataiththu Mananallar
Aakudhal Maanaark Karidhu
— (Transliteration)


palanalla kaṟṟak kaṭaittu maṉanallar
ākutal māṇārk karitu.
— (Transliteration)


Hard for the ignoble to be good-hearted, No matter how well educated they are.

ஹிந்தி (हिन्दी)
सद्‍ग्रंथों का अध्ययन, यद्यपि किया अनेक ।
शत्रु कभी होंगे नहीं, स्नेह-मना सविवेक ॥ (८२३)


தெலுங்கு (తెలుగు)
చదివినంత రాదు సంస్కార సంపత్తి
మనసు మనసుతోడ మైత్రిగాక. (౮౨౩)


மலையாளம் (മലയാളം)
ഏറെപ്പഠിച്ചു പാണ്ഢിത്യമേറ്റാലും ദുഷ്ടരാവുകിൽ സംസ്കൃതാശയരായ് മാറാൻ സാദ്ധ്യമാകില്ലൊരിക്കലും (൮൱൨൰൩)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಹಲವು ಒಳೆಯ ಗ್ರಂಥಗಳನ್ನು ಓದಿಕೊಂಡು ವಿದ್ಯಾವಂತರಾಗಿದ್ದರೂ ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ಒಳ್ಳೆಯವರಾಗಿರುವುದು, ಅಲ್ಪ ಮನಸ್ಕರಿಗೆ (ಹಗೆಗಳಿಗೆ) ಅಸಾಧ್ಯ. (೮೨೩)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
अधीतेष्वपि शास्त्रेषु हार्दमैत्र्या प्रवर्तनम् ।
नैव साध्यं भवेत्तेषां ये भवन्ति विरोधिन: ॥ (८२३)


சிங்களம் (සිංහල)
නොයෙකූත් සිප් සතර - දැනගත් නුගූණවතූනට සිත් හොඳකර ගැනුම - බොහෝ විට අපහසුයි අරුමයි (𑇨𑇳𑇫𑇣)

சீனம் (汉语)
人卽使博學多能, 若心有所恨, 亦不易遺忘之也. (八百二十三)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Biar pun ilmu-nya itu luas dan suchi, amat sulit-lah bagi sa-orang se- teru untok melenyapkan sama sa-kali rasa benchi di-hati.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
좋은책을아무리많이읽더라도적은좋은친구가될수없다. (八百二十三)

உருசிய (Русский)
Никогда низкие, лицемерные люди не будут верными друзьями, даже если они и познали премудрые истины

அரபு (العَرَبِيَّة)
مع أن العدو يحصل علما واسعا ويصير تقيا يستـحـيل عليه أن ينبذ نفرة قلبه اليك (٨٢٣)


பிரெஞ்சு (Français)
Bien qu'il étudie divers bons ouvrages, il est impossible à un ennemi de se couvertir en ami.

ஜெர்மன் (Deutsch)
Mögen sie auch noch so viele gute Bücher meistern - freundlich im Herzen zu sein fällt Feinden schwer.

சுவீடிய (Svenska)
Om de än har hämtat lärdom från många goda böcker är det för onda människor svårt att förvärva hjärtats godhet.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Quamvis multa didicerint bona, bonam consequi voluntatem ini- mici vix poterunt. (DCCCXXIII)

போலிய (Polski)
Złego serca nauka złagodzić nie może: Daje wiedzę, nie daje zacności.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22