பழைமை

கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.   (௮௱௮ - 808) 

நண்பரின் குற்றங்குறைகளைப் பிறர் சொன்னாலும் கேளாத நட்புரிமை வல்லவர்களுக்கு, நண்பர் குற்றம் செய்தால், அது அந்நாளின் குறையாகவே தோன்றும்  (௮௱௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.  (௮௱௮)
— மு. வரதராசன்


நண்பன் உரிமை எடுத்துச் செய்து பிழையை அடுத்தவர் எடுத்துக்காட்டியும் ஏற்றுக் கொள்ளாத நட்புரிமை உடையவர்க்கு நண்பன் பிழை செய்யும் நாள் பயனுள்ள நாளாம்.  (௮௱௮)
— சாலமன் பாப்பையா


நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும்  (௮௱௮)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑁂𑀴𑀺𑀵𑀼𑀓𑁆𑀓𑀫𑁆 𑀓𑁂𑀴𑀸𑀓𑁆 𑀓𑁂𑁆𑀵𑀼𑀢𑀓𑁃𑀫𑁃 𑀯𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼
𑀦𑀸𑀴𑀺𑀵𑀼𑀓𑁆𑀓𑀫𑁆 𑀦𑀝𑁆𑀝𑀸𑀭𑁆 𑀘𑁂𑁆𑀬𑀺𑀷𑁆 (𑁙𑁤𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Kelizhukkam Kelaak Kezhudhakaimai Vallaarkku
Naalizhukkam Nattaar Seyin
— (Transliteration)


kēḷiḻukkam kēḷāk keḻutakaimai vallārkku
nāḷiḻukkam naṭṭār ceyiṉ.
— (Transliteration)


Close friends who won't listen to friend's faults, Hail in silence the day they offend.

ஹிந்தி (हिन्दी)
मित्र-दोष को ना सुनें, ऐसे मित्र धनिष्ठ ।
मानें उस दिन को सफल, दोष करें जब इष्ट ॥ (८०८)


தெலுங்கு (తెలుగు)
వినక నెవరు జెప్ప విశ్వసించెడు మిత్రు
ద్రోహపరచు దినమె దుర్దినమ్ము. (౮౦౮)


மலையாளம் (മലയാളം)
സ്നേഹിതൻ ചെയ്ത കുറ്റങ്ങളന്യർ ചൊൽകിലെതിർക്കുവോർ കുറ്റം ചെയ്യുന്ന നാളോർത്താൽ നല്ലനാളായ് ഭവിച്ചിടും (൮൱൮)

கன்னடம் (ಕನ್ನಡ)
ತಮ್ಮ ಸಲಿಗೆಯ ಗೆಳೆಯರ ದೋಷಗಳನ್ನು ಇತರರು ಹೇಳಿದರೂ ಅದನ್ನು ಮನಸ್ಸಿಗೆ ಹಾಕಿಕೊಳ್ಳದೆ ಇರುವವರು, ಆ ಸ್ನೇಹಿತರು ತಪ್ಪು ಮಾಡಿದ ದಿನವೇ ಶುಭ ದಿನವೆಂದು ಬಗೆಯುತ್ತಾರೆ. (೮೦೮)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
पूर्वमित्रकृतं दोषमुच्यमानं परैरपि ।
अश्रुण्वतो मित्रकृतो दोष: सुदिनतां व्रजेत् ॥ (८०८)


சிங்களம் (සිංහල)
යහළුන් දෙන වැරදි - නොතකන බලවතූන්හට වැරදි කළ දවසත් - හොඳයි උරගා බැලීමක් ලෙස (𑇨𑇳𑇨)

சீனம் (汉语)
知己之辈, 拒聞友人之罪過; 設其有傷於友, 一笑置之而已. (八百八)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Lihat-lah mereka yang tidak mahu mendengar sa-barang tudohan terhadap rakan karib yang di-sayangi-nya: hari ia melukakan mereka ada-lah hari pesta sa-benar-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
옛친구는상처를받더라도좋은날이라고생각하며, 친구의실수를신경쓰지않으리라. (八百八)

உருசிய (Русский)
Верный давней дружбе человек не услышит речей о деяниях своего друга. Когда друг совершает добрый поступок, этот день приносит радость

அரபு (العَرَبِيَّة)
هناك رجالا لا يقبلون من أن يسمعوا تهمة عن اصدقائهم الـقيمة بل يفرحون عند ما يسيئ اليهم احد من أصدقائهم (٨٠٨)


பிரெஞ்சு (Français)
Pour ceux qui ont la délicatesse de ne pas prêter oreille aux imputations relatives aux fautes des amis, le jour où ces fautes sont commises est un jour avantageux.

ஜெர்மன் (Deutsch)
Wer das Vorrecht der Freundschaft kennt und nicht auf Gerüchte hörr, freut sich an dem Tag, da seine Freunde einen Fehler begehen.

சுவீடிய (Svenska)
För dem som äger vänskapens frihet och ej lyssnar på förtal om sina vänner är det en angenäm dag även när vänner tar sig friheter mot dem.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Qui fumiliaritatis sunt compotes, quae delictum familiaris ne audire quidem velit, iis, si amicus deliquerit, dies (festus) est. (DCCCVIII)

போலிய (Polski)
Plotek na jego temat po prostu nie słuchaj I bądź gotów mu wszystko przebaczyć.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22