அவை அஞ்சாமை

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.   (௭௱௨௰௮ - 728) 

நல்லவர்கள் அவையிலே, அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி நல்ல பொருள்பற்றிப் பேசத் தெரியாதவர்கள் பலவகையான நூல்களைக் கற்றவரானாலும் பயன் இல்லாதவரே!  (௭௱௨௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நல்ல அறிஞரின் அவையில் நல்லப் பொருளைக் கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.  (௭௱௨௰௮)
— மு. வரதராசன்


நல்லனவற்றை நல்லவர் கூடிய அவையில் அவர் மனங் கொள்ளச் சொல்லத் தெரியாதவர், பலதுறை நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே.  (௭௱௨௰௮)
— சாலமன் பாப்பையா


அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை  (௭௱௨௰௮)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀮𑁆𑀮𑀯𑁃 𑀓𑀶𑁆𑀶𑀼𑀫𑁆 𑀧𑀬𑀫𑀺𑀮𑀭𑁂 𑀦𑀮𑁆𑀮𑀯𑁃𑀬𑀼𑀴𑁆
𑀦𑀷𑁆𑀓𑀼 𑀘𑁂𑁆𑀮𑀘𑁆𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀸 𑀢𑀸𑀭𑁆 (𑁘𑁤𑁜𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Pallavai Katrum Payamilare Nallavaiyul
Nanku Selachchollaa Thaar
— (Transliteration)


pallavai kaṟṟum payamilarē nallavaiyuḷ
naṉku celaccollā tār.
— (Transliteration)


They are useless however learned Who cannot impress a learned assembly.

ஹிந்தி (हिन्दी)
रह कर भी बहु शास्त्रविद, है ही नहिं उपयोग ।
विज्ञ-सभा पर असर कर, कह न सके जो लोग ॥ (७२८)


தெலுங்கு (తెలుగు)
ఎంత జదుపుకొన్న నేమౌను సభలోన
వ్యక్తపరుపకున్న ముక్తసరిగ. (౭౨౮)


மலையாளம் (മലയാളം)
വിദ്വൽസ്സദസ്സിൽ ഭാഷിക്കാൻ പ്രാപ്‌തനല്ലാത്ത പണ്‌ഡിതൻ ഗ്രന്ഥമേറെപ്പഠിച്ചാലും‍ ഫലമില്ലാതെപോയിടും‍. (൭൱൨൰൮)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಚೆನ್ನಾಗಿ ಅರಿತವರ ಸಭಯಲ್ಲಿ ಒಳ್ಳೆಯ ವಿಷಯಗಳನ್ನು (ಕೇಳುವವರ) ಮನಮುಟ್ಟುವಂತೆ ಹೇಳಲಾರದವರು, ಹಲವು ವಿಷಯಗಳನ್ನು ಕಲಿತೂ ಪ್ರಯೋಜನವಿಲ್ಲದವರೇ (ಆಗುತ್ತಾರೆ). (೭೨೮)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
सत्सभायामनेकार्थकथने भीरुणा स्फुटम् ।
अधीतास्वपि विद्यासु सकलासु वृथैव ता: ॥ (७२८)


சிங்களம் (සිංහල)
සබාවට බිය වන - උගත්කම් ඇති සමහරු නුගතූනට වඩා - අදම වෙත් මැ යි නැණින් බැලුවිට (𑇧𑇳𑇫𑇨)

சீனம் (汉语)
處身於學者之前, 而不敢侃侃論辯者, 縱有學問, 亦無所用也. (七百二十八)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Lihat-lah mereka yang tidak dapat menyampaikan hujjah-nya dengan baik di-hadapan himpunan orang2 berilmu: walau pun pengetahuan- nya beraneka ragam, mereka tiada-lah membawa guna.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
의회에서좋은것을효과적으로말할수없는사람은, 교육을받았더라도소용없다. (七百二十八)

உருசிய (Русский)
Бесполезны люди, которые не умеют произнести яркое и умное слово перед мудрыми, даже если эти люди и высоко ученые

அரபு (العَرَبِيَّة)
لا فائدة فى علم رجل ماهر فى علوم عديدة الذى لا يقدر على التحدث بما يقتـنع به العلماء (٧٢٨)


பிரெஞ்சு (Français)
N'est d'aucune utilité au monde le vaste savoir de celui qui, par peur, ne peut pas dire de bonnes choses dans une réunion de gens de Bien, de manière à les faire apprécier par eux.

ஜெர்மன் (Deutsch)
Wer in einer guten Versammlung Gutes nicht überzeugend zu sagen vermag, ist wertlos, trotz seines umfangreichen Wissens.

சுவீடிய (Svenska)
Till ingen nytta är allt vad de har lärt om de ej förmår tala redigt inför konungens råd.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Etiamsi plurima didicerint, inutiles sunt, qui coram bonis bona dicere non possint, ut grate accipiantur. (DCCXXVIII)

போலிய (Polski)
Egoista treść książek, ich mądrość i wiedzę Pożre sam - bez korzyści dla świata.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22