அவையறிதல்

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.   (௭௱௰௩ - 713) 

தாமிருக்கும் அவையின் தன்மையை அறியாதவர்களாக, ஒன்றைச் சொல்பவர்கள் சொல்லின் வகையை அறியாதவர்கள்; அவர்களால் எதையுமே சாதிக்க முடியாது  (௭௱௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே, அவர் சொல்லவல்லதும் இல்லை.  (௭௱௰௩)
— மு. வரதராசன்


தம் பேச்சைக் கேட்கும் சபையின் இயல்பை அறியாமல் தொடர்ந்து பேசத் தொடங்குபவர், சொற்களின் கூறம் தெரியாதவர்; சொல்லும் திறமும் இல்லாதவர்.  (௭௱௰௩)
— சாலமன் பாப்பையா


அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது  (௭௱௰௩)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀯𑁃𑀬𑀶𑀺𑀬𑀸𑀭𑁆 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀮𑁆𑀫𑁂𑀶𑁆 𑀓𑁄𑁆𑀴𑁆𑀧𑀯𑀭𑁆 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀺𑀷𑁆
𑀯𑀓𑁃𑀬𑀶𑀺𑀬𑀸𑀭𑁆 𑀯𑀮𑁆𑀮𑀢𑀽𑀉𑀫𑁆 𑀇𑀮𑁆 (𑁘𑁤𑁛𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Avaiyariyaar Sollalmer Kolpavar Sollin
Vakaiyariyaar Valladhooum Il
— (Transliteration)


avaiyaṟiyār collalmēṟ koḷpavar colliṉ
vakaiyaṟiyār vallatū'um il.
— (Transliteration)


Only poor orators, good for nothing, speak at length Without knowing the audience.

ஹிந்தி (हिन्दी)
उद्यत हो जो बोलने, सभा-प्रकृति से अज्ञ ।
भाषण में असमर्थ वे, शब्द-रीति से अज्ञ ॥ (७१३)


தெலுங்கு (తెలుగు)
స్థితిని దెలియలేకఁ జెప్పెడివారెల్ల
మాట దెలియనట్టి మోటువారె (౭౧౩)


மலையாளம் (മലയാളം)
കയ്യാളും‍ വിഷയം‍ നന്നായറിയാതെ, ചിന്തിക്കാതെ സഭയിൽ‍ ഗതിയോരാതെ ഭാഷിക്കുന്നവരജ്ഞരാം‍. (൭൱൰൩)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಸಭಾ ತಿಳುವಳಿಕೆಯಿಲ್ಲದೆ ಮಾತನಾಡಲು ತೊಡಗುವವರು ಮಾತಿನ ಬಗೆಯನ್ನು ಅರಿಯದವರು; ಅವರಲ್ಲಿ ವಿದ್ಯೆಯ ಬಲಿಮೆಯೂ ಇರುವುದಿಲ್ಲ. (೭೧೩)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
सभिकानां तु रासिक्यमज्ञात्वा भाषणोद्यता: ।
असमर्थाश्च कथने निर्विद्याश्च मता: समै: ॥ (७१३)


சிங்களம் (සිංහල)
නො දැන සබයෙහි තතූ - කතනය කරන්නන්හට හැකියාව සමගින් - උපන් බලයත් නැතිව යාවි (𑇧𑇳𑇪𑇣)

சீனம் (汉语)
人向大衆演說,而不瞭解其聽衆者,可謂無術,難於柯成也. (七百十三)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Lihat-lah mereka yang telah bersedia untok memberi uchapan kapada suatu majlis dengan tidak mempelajari sifat2 majlis itu: mereka tidak mengetahui seni beruchap, malah mereka tidakjuga sesuai untok apa2 sahaja.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
청중을염두에두지않고말하는자들은웅변기술과단어의선택이부족하다. (七百十三)

உருசிய (Русский)
Познай слушателей, а затем лишь решайся произносить речь. Так поступают люди, владеющие словом

அரபு (العَرَبِيَّة)
إن الذين يخاطبون مجمعا من الناس بغير أن يعرفوا من طبيعتهم وفطرتهم لا يعرفون فن الخطابة ولاهم صالحون لشيئ آخر (٧١٣)


பிரெஞ்சு (Français)
Ceux qui prennent sur eux de discourir dans une assemblée,

ஜெர்மன் (Deutsch)
Wer spricht, ohne die Versammlung zu kennen, dem fehlt die Kunst des Redens und des Lernens.

சுவீடிய (Svenska)
De som tar sig för att tala utan att känna till rådsförsamlingens sammansättning behärskar ej talets konst och förmår ej heller något annat.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Qui coetum ignorantes dicere suscipiant, modum dieendi nesciunt; neque quidquam efficiunt. (DCCXIII)

போலிய (Polski)
Ten, co mówi w nieznane, nie wiedząc kto słucha, Jest jak człek, który mówić nie umie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉம் இல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22