வினைத்திட்பம்

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.   (௬௱௬௰௩ - 663) 

செயலில் ஆண்மையாவது, முடிந்தபின் வெளியே புலப்படுமாறு அதுவரை மறைத்துச் செய்வதாம்; இடையில் வெளிப்பட்டால், அது தீராத துன்பத்தையே தரும்  (௬௱௬௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிபட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.  (௬௱௬௰௩)
— மு. வரதராசன்


ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அது செயலைச் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.  (௬௱௬௰௩)
— சாலமன் பாப்பையா


செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும் இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்  (௬௱௬௰௩)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀝𑁃𑀓𑁆𑀓𑁄𑁆𑀝𑁆𑀓𑀘𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀓𑁆𑀓 𑀢𑀸𑀡𑁆𑀫𑁃 𑀇𑀝𑁃𑀓𑁆𑀓𑁄𑁆𑀝𑁆𑀓𑀺𑀷𑁆
𑀏𑁆𑀶𑁆𑀶𑀸 𑀯𑀺𑀵𑀼𑀫𑀦𑁆 𑀢𑀭𑀼𑀫𑁆 (𑁗𑁤𑁠𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
663, Kataikkotkach Cheydhakka Thaanmai
ItaikkotkinEtraa Vizhuman Tharum
— (Transliteration)


kaṭaikkoṭkac ceytakka tāṇmai iṭaikkoṭkiṉ
eṟṟā viḻuman tarum.
— (Transliteration)


Reveal thy means in the end. Premature disclosure Can cause irrevocable damage.

ஹிந்தி (हिन्दी)
प्रकट किया कर्मान्त में, तो है योग्य सुधीर ।
प्रकट किया यदि बीच में, देगा अनन्त पीर ॥ (६६३)


தெலுங்கு (తెలుగు)
పూనుకొన్న పనిని పూర్తిగావింపక
నిలువుకొన్నవాడు నిందపాలు. (౬౬౩)


மலையாளம் (മലയാളം)
പണി പൂർത്തിക്ക് മുൻലോക ശ്രദ്ധ പറ്റാതെ നോക്കണം മദ്ധ്യേ ശ്രദ്ധ പതിഞ്ഞീടിൽ വിഘ്നം പലതുനേരിടാം (൬൱൬൰൩)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಮಾಡುವ ಕೆಲಸವನ್ನು ಕೊನೆಯಲ್ಲಿ ಬಹಿರಂಗಪಡಿಸುವುದೇ ಪುರುಷ ಲಕ್ಷಣವೆನಿಸಿಕೊಳ್ಳುವುದು. ನಡುವೆ ಪ್ರಕಟಿಸಿದಲ್ಲಿ ನೀಗಲಾಗದ ದುಃಖವನ್ನು ತರುತ್ತದೆ. (೬೬೩)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
कर्मारब्धमितीत्येतदन्ते चेज्ज्ञायते परै: ।
दृढं भवति तत्, मध्ये ज्ञातं चेद् दु:खमापतेत् ॥ (६६३)


சிங்களம் (සිංහල)
අවසන පෙනෙන ලෙස - කෙරුම ම වීර ගතියයි අතර මඟ නැවතූම - නිසා අපමණ විපත් ගෙන දෙයි (𑇦𑇳𑇯𑇣)

சீனம் (汉语)
士大夫惟於事成之後始言之; 蓋若事未成而先語人, 每遭阻難也. (六百六十三)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Rahsia ranchangan jangan di-abai sa-lagi maksud belum di-chapai: kerana apabila rahsia terbuka sa-belum ketika-nya banyak gendala yang akan menimpa.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
성공적인행위를중간에드러내면끝없는곤란이따르기때문에마지막에공개해야한다. (六百六十三)

உருசிய (Русский)
Настоящая стойкость и мужество высвечивают замыслы человека, которые свершились. Но раскрытие замыслов в процессе их свершения может закончиться для тебя крахом

அரபு (العَرَبِيَّة)
الرجل الفعال لا يظهر مقصدة قبل حصوله لأن الافشاء عنه ربما يسبب له عرتلات لا يستطيع أن يغلب عليها (٦٦٣)


பிரெஞ்சு (Français)
Laisser découvrir l'acte, lorsqu'il est accompli, c'est la fermeté.

ஜெர்மன் (Deutsch)
Eine Tal zu tun, die bei ihrer Vollendung bekannt wird, ist Mannhaftigkeit - wird sie mittendrin, bekannt, entsteht untilgbarer Kummer.

சுவீடிய (Svenska)
En målmedveten man offentliggör ett företag först när det är slutfört. Att yppa sina planer under hand vållar mycken skada.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Ita agere , ut (alii) re finita demum animadvcrtant, est fortiter agere; si jam media re animadvertant, damuum pariet, quod averti nequeat. (DCLXIII)

போலிய (Polski)
Mądry mąż nie podzieli się z nikim swym planem, Bowiem wie, że to zdrada bez mała.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22