ஊக்கம் உடைமை

உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.   (௬௱ - 600) 

ஒருவனுக்கு உள்ள செல்வம் என்பது ஊக்கமே! அந்த ஊக்கம் ஆகிய செல்வம் இல்லாதவர், உருவத்தால் மக்கள் போலத் தோன்றினாலும், மரங்களைப் போன்றவரே!  (௬௱)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.  (௬௱)
— மு. வரதராசன்


ஊக்க மிகுதியே ஒருவனுக்குத் திண்ணிய அறிவு. அவ்வூக்கம் இல்லாதவர் வடிவத்தால் மக்கள்; மனத்தாலோ வெறும் மரமே.  (௬௱)
— சாலமன் பாப்பையா


மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை  (௬௱)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀭𑀫𑁄𑁆𑀭𑀼𑀯𑀶𑁆𑀓𑀼 𑀉𑀴𑁆𑀴 𑀯𑁂𑁆𑀶𑀼𑀓𑁆𑀓𑁃𑀅𑀂 𑀢𑀺𑀮𑁆𑀮𑀸𑀭𑁆
𑀫𑀭𑀫𑁆𑀫𑀓𑁆𑀓 𑀴𑀸𑀢𑀮𑁂 𑀯𑁂𑀶𑀼 (𑁗𑁤)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Uramoruvarku Ulla Verukkaiaq Thillaar
Marammakka Laadhale Veru
— (Transliteration)


uramoruvaṟku uḷḷa veṟukkai'aḥ tillār
maram'makka ḷātalē vēṟu.
— (Transliteration)


Energy is a man's strength: the immobile are Trees in human form.

ஹிந்தி (हिन्दी)
सच्ची शक्ति मनुष्य की, है उत्साह अपार ।
उसके बिन नर वृक्ष सम, केवल नर आकार ॥ (६००)


தெலுங்கு (తెలుగు)
వారి వారి బలము వారికుండెడి పట్టె
పట్టులేనివారు చెట్టు సములు. (౬౦౦)


மலையாளம் (മലയാളം)
ധൈര്യമെന്ന ഗുണം തന്നെ മനുഷ്യന്ന് മഹത്വമാം; രൂപം മനുഷ്യനായാലും ധൈര്യമില്ലാത്തവൻ തരു (൬൱)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಒಬ್ಬನಿಗೆ ಸಾಮರ್ಥ್ಯವೆಂಬುದು ಮಾನಸಿಕ ಸಂಪತ್ತು; ಅದಿಲ್ಲದವರು; ಅದಿಲ್ಲದವರು ಮನುಷ್ಯರ ರೂಪದಲ್ಲಿರುವ ಮರಗಳೇ ವಿನಾ ಬೇರೆ ಅಲ್ಲ. (೬೦೦)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
नराणां बलमुत्साह: तद्विहीननरा द्रुमा: ।
आकारेणैव ते वृक्षा: निष्फलाश्च निरर्थका: ॥ (६००)


சிங்களம் (සිංහල)
දිරිය ගූණ නැතිවුත් - ගස් මෙනි රුවැති මිනිසුන් දැනීම ම දිරියයි - එය ම දියුණුට මඟ සදන්නේ (𑇦𑇳)

சீனம் (汉语)
人之毅力卽其威權; 無之者乃木偶耳. (六百)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Semangat yang berapi2, itu-lah sahaja kekuatan: mereka yang tidak mempunyai-nya ada-lah hanya batang pohonan: jasmani mereka sahaja menimbulkan perbedzaan.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
확고한마음은사람의진정한힘이다.그것이없으면, 인간의형태를한나무에불과하다. (六百)

உருசிய (Русский)
Непоколебимость духа — это истинное богатство человека. Кто лишен этого, уподоблен дереву, на котором просто высечен облик человека

அரபு (العَرَبِيَّة)
قوة الرجل فى جهده المتواصل وإلا هو كمثل شجرة فى صورة بشر (٦٠٠)


பிரெஞ்சு (Français)
L'énergie n'est que l'excès de la finesse de l'esprit. Ceux qui n'en ont pas sont des arbres; ce qui les différencie des vrais arbres c'est leur forme humaine.

ஜெர்மன் (Deutsch)
Willensstärke macht jemandes Erkenntnis aus - wer sie nicht hat, ist bloß ein Baum und Mensch nur der Erscheinung nach.

சுவீடிய (Svenska)
En människas energi är hennes styrka. De som saknar sådant skiljer sig endast till utseendet från döda träd.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Animi robur internum bonum est. Qui eo carent, arbores! Differunt tamen (ab arboribus) eo, quod sunt homines - (multo minus utiles arboribus, quae ligno fructibusque prosunt). (DC)

போலிய (Polski)
Moc człowieka - to wola, by siebie nie splamić. Bez niej jest on makietą człowieka.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மரமும் மக்களும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

ஒருவருக்கு திடமான அறிவு எது என்றால் அது ஊக்கமே ஆகும்.

ஊக்கம் இருந்தால், நல்ல செயல்களையும், மக்களுக்கு நன்மைகளையும் செய்து சிறப்பு அடையலாம்.

ஊக்கம் இல்லாதவர் மரத்தைப் போன்றவர். இயற்கையான சாதி மரங்களுக்கும் இம்மரங்களுக்கும் வேறுபாடு என்னவென்றால் மரமானது காய், கனி, நிழலைத் தருவதோடு சரி. சில மரங்கள் பலவகை பொருள் செய்வதற்கு பயன்படும். இதர மரங்கள் எரிபொருளாகி உதவும்.

ஊக்கம் இல்லாதவர்கள் தோற்றத்தில் மக்களாய் இருப்பார்கள். அதுவே அவருக்கும் மரத்திற்கும் உள்ள வேறுபாடு.


உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார் மரம்மக்க ளாதலே வேறு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22