செங்கோன்மை

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.   (௫௱௪௰௬ - 546) 

மன்னவனுக்கு வெற்றியளிப்பது அவன் கையிலுள்ள வேல் அல்ல; அவன் செங்கோன்மை கோணாமல் இருந்தானால் அதுவே வெற்றி அளிப்பதாகும்  (௫௱௪௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.  (௫௱௪௰௬)
— மு. வரதராசன்


ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.  (௫௱௪௰௬)
— சாலமன் பாப்பையா


ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்  (௫௱௪௰௬)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑁂𑀮𑀷𑁆𑀶𑀼 𑀯𑁂𑁆𑀷𑁆𑀶𑀺 𑀢𑀭𑀼𑀯𑀢𑀼 𑀫𑀷𑁆𑀷𑀯𑀷𑁆
𑀓𑁄𑀮𑀢𑀽𑀉𑀗𑁆 𑀓𑁄𑀝𑀸 𑀢𑁂𑁆𑀷𑀺𑀷𑁆 (𑁖𑁤𑁞𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Velandru Vendri Tharuvadhu Mannavan
Koladhooung Kotaa Thenin
— (Transliteration)


vēlaṉṟu veṉṟi taruvatu maṉṉavaṉ
kōlatū'uṅ kōṭā teṉiṉ.
— (Transliteration)


Not his spear but a straight scepter Is what gives a monarch his triumph.

ஹிந்தி (हिन्दी)
रजा को भाला नहीं, जो देता है जीत ।
राजदण्ड ही दे विजय, यदि उसमें है सीध ॥ (५४६)


தெலுங்கு (తెలుగు)
ఖడ్గబలము కన్నఁగ్రమము కనికరమ్మె
భువన విజయమిచ్చు నవని పతికి. (౫౪౬)


மலையாளம் (മലയാളം)
രാജ്യത്തിൻ വിജയാധാരം യോധനായുധമല്ലകേൾ നീതിപൂർവ്വകമായുള്ള രാജവാഴ്ചയതൊന്നുതാൻ (൫൱൪൰൬)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಅರಸನಿಗೆ ಜಯಗಳಿಸಿ ತರುವುದು ಆಯುಧಗಳಲ್ಲ; ಪಕ್ಷಪಾತವಿಲ್ಲದ ಅವನ ರಾಜದಂಡದ ಬಲ. (೫೪೬)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
शूलमात्रेण भूपालो जयं युद्धे न विन्दते ।
लभते नीतिदण्डेन जयं, दण्डो ऋजुर्यदि ॥ (५४६)


சிங்களம் (සිංහල)
පාලන කෙරේ නම් - ඒ ඒ අයට නො නැමි වේලා යුදය නොව - දිනුම දෙන්නේ එබඳු ගූණයයි (𑇥𑇳𑇭𑇦)

சீனம் (汉语)
王者致勝不能由甲兵; 由其正義不偏之仁政也. (五百四十六)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Bukan-lah tombak yang membawa kemenangan kapada raja: sa- sunggoh-nya chokmar-nya-lah, ia-itu kalau ia-nya lurus dan tidak miring ka-pehak mana.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
창칼이아닌정의로운왕권이왕에게성공을가져온다. (五百四十六)

உருசிய (Русский)
Разве копье приносит славу повелителю? Отнюдь! Триумф ему доставляет праведный скипетр, который не сгибается от неправедных деяний государя

அரபு (العَرَبِيَّة)
لا يحصل الفتح للملك باالسنان بل هو صو لجان الملك الذى يرشد الناس إلى الصواب ولا هو يميل إلى اي احد منهم (٥٤٦)


பிரெஞ்சு (Français)
Ce qui procure la victoire au Prince sur le champ de bataille, ce n'est pas sa flèche, c'est plutôt son sceptre, pourvu qu'il se tienne droit et ne penche d'aucun côté.

ஜெர்மன் (Deutsch)
Nicht der Speer gibt Sieg, sondern des Königs Zepter, das nicht schwankt.

சுவீடிய (Svenska)
Det som ger konungen seger är ej hans vapen utan hans spira, försåvitt han ej dömer orättvist.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Non Iancea victoriam pariet sed regis sceptrum , si illud non flectitur. (DXLVI)

போலிய (Polski)
To nie kopia wyzwala ojczyznę od obcych, Ale ręka, co kopią uderza.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22