சுற்றந் தழால்

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.   (௫௱௨௰௬ - 526) 

மிகுதியாகக் கொடுக்கும் இயல்புள்ளவனாயும், சினத்தை விரும்பாதவனாயும் ஒருவன் இருந்தால், அவனைப் போல் சுற்றம் உடையவர் உலகில் யாரும் இல்லை  (௫௱௨௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.  (௫௱௨௰௬)
— மு. வரதராசன்


ஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை.  (௫௱௨௰௬)
— சாலமன் பாப்பையா


பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்  (௫௱௨௰௬)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑁂𑁆𑀭𑀼𑀗𑁆𑀓𑁄𑁆𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀧𑁂𑀡𑀸𑀷𑁆 𑀯𑁂𑁆𑀓𑀼𑀴𑀺 𑀅𑀯𑀷𑀺𑀷𑁆
𑀫𑀭𑀼𑀗𑁆𑀓𑀼𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀫𑀸𑀦𑀺𑀮𑀢𑁆𑀢𑀼 𑀇𑀮𑁆 (𑁖𑁤𑁜𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Perungotaiyaan Penaan Vekuli Avanin
Marungutaiyaar Maanilaththu Il
— (Transliteration)


peruṅkoṭaiyāṉ pēṇāṉ vekuḷi avaṉiṉ
maruṅkuṭaiyār mānilattu il.
— (Transliteration)


None in this world has a larger kinship than he Who is liberal and curbs his wrath.

ஹிந்தி (हिन्दी)
महादान करते हुए, जो है क्रोध-विमुक्त ।
उसके सम भू में नहीं, बन्धुवर्ग से युक्त ॥ (५२६)


தெலுங்கு (తెలుగు)
దాతయయ్య కోపతాపమ్ము లేకున్నఁ
జుట్టరికము లేనిచోటు లేదు. (౫౨౬)


மலையாளம் (മലയാളം)
കോപമില്ലായ്മയും വാരിക്കൊടുപ്പും ശീലമായവൻ സ്നേഹബന്ധം പുലർത്തുന്നോനതുല്യൻ ലോകദൃഷ്ടിയിൽ (൫൱൨൰൬)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಹೇರಳವಾಗಿ ಕೊಡುವವನೂ, ಕೋಪವನ್ನು ತೋರದವನೂ ಆಗಿದ್ದರೆ, ಅವನಂತೆ ಸಂಬಂಧಿಗಳ ಕೂಡ ಬಾಳುವವರು ಲೋಕದಲ್ಲಿ ಇಲ್ಲ. (೫೨೬)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
पृथिव्यां दानशौण्डस्य जितक्रोधस्य भूपते: ।
वशंवदा सदा तिष्ठेत् सकला बन्धुसन्तति: ॥ (५२६)


சிங்களம் (සිංහල)
තැන නො තැන ඉවසන - දන් දෙන හිතැති බෙහෙවින් පින් වතූනට වඩා - නො මැත වෙන නෑසියන් ඇත්තෙක් (𑇥𑇳𑇫𑇦)

சீனம் (汉语)
寬宏大量而不怒目向人者, 可有至大之親情矣. (五百二十六)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Lihat-lah orang yang murah hati-nya dan memberi tanpa hemat serta tiada pula marah di-dalam diri-nya: dunia tidak mempunyai orang lain yang lebeh di-sayangi kaum keluarga-nya daripada dia.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
세상에서오직관대하고분노가없는자들의주위에만수없이많은친척이모여든다. (五百二十六)

உருசிய (Русский)
Если повелитель наделен щедростью и ласков, с окружающими, то он всегда в этом мире будет радоваться дружбе близких. Никто не сравнится с ним в этом виде богатства

அரபு (العَرَبِيَّة)
ليس هناك احد فى العالم أن يبارى رجلا يعطى الناس بكثرة وبغير حد ولا يغضب على اقرباءه فى حين من الأحيان (٥٢٦)


பிரெஞ்சு (Français)
Il n'y a pas en ce vaste monde, d'homme qui ait des parents plus nombreux, que celui qui fait des largesses et qui n'aime pas la colère.

ஜெர்மன் (Deutsch)
Auf Erden hat keiner mehr Verwandte als der, der viel gibt und das ohne Ärger.

சுவீடிய (Svenska)
I hela världen blir ingen mer rikligt omgiven av anförvanter än den som ger rikliga gåvor och ej ger efter för vreden.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
In magno terrarum orbe nemo plures habet secum facientes, quam rex, qui multa largitur neque iram fovet. (DXXVI)

போலிய (Polski)
I współczucie okaże, łagodny jest w mowie Oraz serce ma wolne od złości.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குடையார் மாநிலத்து இல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22