தெரிந்து தெளிதல்

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.   (௫௱௩ - 503) 

அருமையான நூல்களைக் கற்று, குற்றங்கள் எதுவும் இல்லாதவரிடத்திலும், ஆராய்ந்தால் அறியாமை இல்லாமல் இருப்பது என்பது அருமையாகும்  (௫௱௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.  (௫௱௩)
— மு. வரதராசன்


அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.  (௫௱௩)
— சாலமன் பாப்பையா


அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட அழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்துவிட இயலாது  (௫௱௩)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀭𑀺𑀬𑀓𑀶𑁆𑀶𑀼 𑀆𑀘𑀶𑁆𑀶𑀸𑀭𑁆 𑀓𑀡𑁆𑀡𑀼𑀫𑁆 𑀢𑁂𑁆𑀭𑀺𑀬𑀼𑀗𑁆𑀓𑀸𑀮𑁆
𑀇𑀷𑁆𑀫𑁃 𑀅𑀭𑀺𑀢𑁂 𑀯𑁂𑁆𑀴𑀺𑀶𑀼 (𑁖𑁤𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Ariyakatru Aasatraar Kannum Theriyungaal
Inmai Aridhe Veliru
— (Transliteration)


ariyakaṟṟu ācaṟṟār kaṇṇum teriyuṅkāl
iṉmai aritē veḷiṟu.
— (Transliteration)


Even the widely-read and faultless, when scrutinized, Are rarely found free of ignorance.

ஹிந்தி (हिन्दी)
ज्ञाता विशिष्ट शास्त्र के, औ’ निर्दोष स्वभाव ।
फिर भी परखो तो उन्हें, नहिं अज्ञता-अभाव ॥ (५०३)


தெலுங்கு (తెలుగు)
విద్య లెఱిఁగి నట్టె విద్వాంసుఁడెనను
తప్పుఁజేయడంచు జెప్పలేము. (౫౦౩)


மலையாளம் (മലയാളം)
ഏറെ ഗ്രന്ഥം പഠിച്ചോനും കുറ്റമറ്റവനാകിലും സൂക്ഷ്മശോധനയിൽ വിദ്വാനാണെങ്കിൽ യോഗ്യനാണയാൾ (൫൱൩)

கன்னடம் (ಕನ್ನಡ)
ದುರ್ಲಭ ಗ್ರಂಥಗಳನ್ನು ಓದಿ ತಿಳಿದು, ದೋಷಗಳನ್ನು ನಿವಾರಿಸಿಕೊಂಡವರನ್ನು ಪರೀಕ್ಷಿಸುವಾಗಲೂ (ಅವರಲ್ಲಿ) ಅಜ್ಞಾನವಿಲ್ಲದಿರುವುದು ಅಪರೂಪವೆಂಬುದು ಕಂಡು ಬರುವುದು. (೫೦೩)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
पूर्वोक्तदोषशून्येषु पण्डिताग्रेसरेष्वपि ।
विचार्यमाणेत्वज्ञानं नूनं द्रष्‍टुं हि शक्यते ॥ (५०३)


சிங்களம் (සිංහල)
අනගි සිප්සත දත් - නිවැරදි මහත් නැණවත් දොස් නැතිවිය නොහේ - විමසුවොත් ඒ උගත් වියතූන් (𑇥𑇳𑇣)

சீனம் (汉语)
純潔而博學之士易得, 絕無疏失之人不易得也. (五百三)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Biar pun pada orang yang luar biasa ilmu-nya serta suchi hati-nya, bila di-uji akan di-dapati tidak terlepas sama sa-kali dari segala ke-jahilan.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
결점이없는위대한학자라도모르는것이완전히없지는않다. (五百三)

உருசிய (Русский)
Среди людей, которые познали самые трудные вещи и которые свободны от недостатков, редко найдешь таких, которые отмечены незнанием

அரபு (العَرَبِيَّة)
أصحاب العلم النادر وذو والقلوب الصافية إذا إختبرتهم لا تجد هم مبرئين من الجهالة بكل جهة (٥٠٣)


பிரெஞ்சு (Français)
Même parmi ceux qui ont une rare instruction, et qui sont dégagés de tous les défauts, (ci dessus spécifiés), il est rare de ne pas trouver de sots, si l'on se livre à un examen minutieux.

ஜெர்மன் (Deutsch)
Bei genauer Prüfung ist ea selten, kein Unwissen zu finden, selbst nicht bei untadeligen Gelehrten.

சுவீடிய (Svenska)
Även när man noga granskar sådana som besitter ovanlig lärdom och är fria från brister är det sällsynt att finna dem helt fria från okunnighet.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Etiam in eo, qui di.fficilia didicit et culpa caret, si investigcs, vacui- tatem erroris vix invenies. (DIII)

போலிய (Polski)
Bywa człowiek uczciwy i bardzo uczony, Co o świecie ma błędne pojęcie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22