குற்றங்கூறாமை

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.   (௪௱௩௰௩ - 433) 

பழிச்சொல்லுக்கு வெட்கப்படுகின்றவர்கள், தினை அளவான சிறு குற்றம் தம்மிடம் வந்தாலும், அதனைப் பனையளவு பெரிதாகக் கருதி வருந்துவார்கள்  (௪௱௩௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.  (௪௱௩௰௩)
— மு. வரதராசன்


பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.  (௪௱௩௰௩)
— சாலமன் பாப்பையா


பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்  (௪௱௩௰௩)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀺𑀷𑁃𑀢𑁆𑀢𑀼𑀡𑁃𑀬𑀸𑀗𑁆 𑀓𑀼𑀶𑁆𑀶𑀫𑁆 𑀯𑀭𑀺𑀷𑀼𑀫𑁆 𑀧𑀷𑁃𑀢𑁆𑀢𑀼𑀡𑁃𑀬𑀸𑀓𑁆
𑀓𑁄𑁆𑀴𑁆𑀯𑀭𑁆 𑀧𑀵𑀺𑀦𑀸𑀡𑀼 𑀯𑀸𑀭𑁆 (𑁕𑁤𑁝𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Thinaiththunaiyaang Kutram Varinum Panaiththunaiyaak
Kolvar Pazhinaanu Vaar
— (Transliteration)


tiṉaittuṇaiyāṅ kuṟṟam variṉum paṉaittuṇaiyāk
koḷvar paḻināṇu vār.
— (Transliteration)


To those ashamed of wrong doings, Even millet of fault is as big as a palm-tree.

ஹிந்தி (हिन्दी)
निन्दा का डर है जोन्हें, तिलभर निज अपराध ।
होता तो बस ताड़ सम, मानें उसे अगाध ॥ (४३३)


தெலுங்கு (తెలుగు)
కొంచమైన నేపము కొండగా భావింత్రు
నింద కోర్వనట్టి నీతిపరులు (౪౩౩)


மலையாளம் (മലയാളം)
കുറ്റം ഭയന്നമാലോകർ തിനയോളം കുറ്റങ്ങളെ പനയോളമെന്ന് കണ്ടു കാത്തു സൂക്ഷിച്ചുകൊള്ളുമേ (൪൱൩൰൩)

கன்னடம் (ಕನ್ನಡ)
ನಿಂದೆಗೆ ನಾಚುವವರು, ತೆನೆಯ ಕಾಳಿನಷ್ಟು ಅಲ್ಪವಾದ ಅಪರಾಧ ತಮ್ಮಿಂದ ನಡೆದರೂ, ಅದನ್ನು ಹನೆಯಷ್ಟು (ತಾಳೆಮರದಷ್ಟು) ದೊಡ್ಡದಾಗಿ ಭಾವಿಸುವರು. (೪೩೩)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
स्वल्पे दोषोऽपि सम्प्राप्ते तं मत्वा सुमहत्तरम् ।
महान्तो जागरूका: स्यु: जननिन्दाभयाकुला ॥ (४३३)


சிங்களம் (සිංහල)
අමුවක පමණ සුළු - දොස ඇති වුවත් නිතරම තල් පමණ වන ලෙස - ගනිති නින්දාවට බියැත්තෝ (𑇤𑇳𑇬𑇣)

சீனம் (汉语)
潔身自愛之士, 雖視細微之過亦甚重大. (四百三十三)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Lihat-lah orang yang chemburu akan nama baik-nya: biar pun ke- chachatan-nya sa-kechil biji jelai, di-anggap-nya sa-besar pohon palmira.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
비난을두려워하는자는작은실수도큰실수로고려할것이다. (四百三十三)

உருசிய (Русский)
Добрые люди, которые стыдятся позора даже величиной в семя проса, воспринимают малейший грех так, словно он размером с гигантскую пальму

அரபு (العَرَبِيَّة)
فى أعين رجل يخاف الخزي والعار (٤٣٣)


பிரெஞ்சு (Français)
Ceux qui redoutent le déshonneur, considèrent leurs défauts aussi petits qu'un grain de millet, comme s'ils sont aussi gros qu'un palmier.

ஜெர்மன் (Deutsch)
Wer sich der Schande schämt, dem scheint ein Fehler, klein wie ein Hirscsamen, so groß wie eine Palmyranuß.

சுவீடிய (Svenska)
Även synder små som frön blir stora såsom palmer i deras ögon som är måna om sitt anseende.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Qna.mvis prope sit culpa, quae milii grano par sit, qui a vitiis, abhorrent, earn palmae arbori parem judicabunt. (CDXXXIII)

போலிய (Polski)
Nawet błąd najdrobniejszy wydaje się klęską W oczach tych, którzy dbają o sławę.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


குற்றம் இல்லாத வாழ்க்கை — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

மேலான வாழ்வு எது?

பழிபாவம் எதுவும் இல்லாமல் வாழ்வதே சிறப்பாகும்.

செல்வமோ, பதவியோ சிறப்பை தந்துவிடாது.

தன்னிடம் சிறிது அளவு குற்றம் கூட வராமல் கவனமாக காத்துக் கொள்ள வேண்டும்.

(குற்றம் செய்வதில் பெரிய குற்றம், சிறிய குற்றம் என்பது இல்லை)

எதிர்பாராமல் தன்னிடம் தினையளவு குற்றம் உண்டாகி விட்டாலும் பழி பாவத்துக்கு பயந்து அதனை அளவாக நினைக்க வேண்டும்.

அப்படிக் கருதினால் தான், குற்றம் நிகழாமல் தடுத்து கொண்டு, மேலான வாழ்வு வாழ முடியும்.

பழி, பாவம் என்பது திறமையான சொல் குற்றம்.

தினை, பனை நண்பன அளவை குறிப்பன.


தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22